
மேலும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நூலகங்களில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயில்பவர்களின் வசதிக்காக பாடத்திட்டங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் வைக்கப்பட்டு வாரந்தோறும் விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறினார்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி , தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக அவர்களின் குறைகளை தீர்க்க புதிய இணையதள பக்கம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92,000 இடங்களுக்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பதாக கூறினார்.
மேலும், அந்த கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் அவர்கள் விரும்பும் அரசு கல்லூரி மற்றும் விரும்பும் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் வாயிலாக பயில்வதற்கு பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தர்.








