'தமிழகத்தில்,
பள்ளிகளை திறப்பது குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, பள்ளிக்
கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி,
கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, ஆன்லைனில் மட்டும் வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு,
கல்வி, 'டிவி' மற்றும் பிற தனியார், 'டிவி'க்கள் வழியே, 'வீடியோ' பாடங்கள்
நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள், பல்வேறு செயலிகள் வழியே, 'ஆன்லைன்'
வகுப்பை நடத்துகின்றன.இந்நிலையில், நவம்பரில் பள்ளிகளை திறக்கவும்,
காலாண்டு, அரையாண்டு தேர்வை ரத்து செய்யவும், பள்ளிக் கல்வித் துறை
முடிவெடுத்துள்ளதாக, நேற்று தகவல்கள் பரவின.
இது
தொடர்பாக, பள்ளி கல்வித் துறை அளித்துள்ள விளக்கம்:பள்ளிகளை திறப்பது
குறித்து, அரசு இன்னும் உரிய முடிவு எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக
வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். பள்ளிகள் திறப்பு குறித்து உரிய நேரத்தில்
ஆலோசித்து, பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.