💫🌹🇮🇳தேசிய மூவர்ணக் கொடியின் வரலாறும் , தயாரிப்பின் விதிமுறைகளும்💫🌹🇮🇳! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


💫🌹🇮🇳தேசிய மூவர்ணக் கொடியின் வரலாறும் , தயாரிப்பின் விதிமுறைகளும்💫🌹🇮🇳!

“தாயின் மணிக்கொடி பாரீர் அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
Lபாங்கின் எழுதி திகழும் செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!” என்று போற்றி வீறு கொண்டு பாடினார் பாரதியார்.


ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 15 ஐ சுதந்திர தினமாக கொடியேற்றி, இனிப்பு வழங்கி விடுமுறை நாளாகக் கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால் இதனைப் பெற எத்தனை தேச பக்தர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளார்கள் என்பதை இந்த ஒரு நாளிலாவது நினைத்துப் பார்ப்பது நம் கடமை.




இந்தியாவின் பாரம்பரியத்தையும், குடியரசையும் நம் தேசியக் கொடி பறைசாற்றுகிறது.


தேசியக் கொடி ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர் மூச்சு. கொடிகாக்க உயிர் துறந்த குமரனை நாம் அறிவோம்.
ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக விளங்குவது அந்நாட்டின் தேசியக் கோடியே! ஒவ்வொரு நாடும் அது பிறக்கும் முன்பாகவே தேசியக் கொடியை உருவாக்கி இருக்கும். அது போலவே இந்தியாவும் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தேசியக் கொடியை உருவாக்கியது. பல வித உருவம், அளவு, நிறங்களோடு பல ஆண்டு காலமாக தயாரிக்கப்பட்டு மாறுதல் பெற்று வந்த நம் தேசியக் கொடி 1947 ல் தற்போதைய உருவத்தை பெற்றது. .


தற்போது நாம் ஏற்றி வணங்கும் தேசியக் கொடி உருவான வரலாறு சுவையான ஒன்று. இந்தியாவின் நீண்ட கால விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக தேசியக் கொடி திகழ்கிறது.


 சுதந்திரப் போராட்டத்தின் போது, போராடும் இயக்கங்களை ஒருங்கிணைக்க ஒரு கொடியின் தேவையை தலைவர்கள் உணரத் தொடங்கினர்.


1904 இல் முதன்முதலாக சுவாமி விவேகானந்தரின் ஐரிஷ் சீடரான சகோதரி நிவேதிதையால் விடுதலைப் போராட்டத்தை இணைக்கும் தேசிய கொடி வடிவமைக்கப்பட்டது. இது மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களைக் கொண்டிருந்தது. மஞ்சள் நிறம் வெற்றியையும், சிவப்பு நிறம் விடுதலைப் போரட்டத்தையும் குறிப்பதாக அமைந்தது. அதன் மேல் வங்க மொழியில் ‘வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டு, இந்திரனின் வஜ்ராயுதமும், வெள்ளை தாமரையும் வரையப்பட்டிருந்தன. வஜ்ராயுதம் வலிமையையும், தாமரை புனிதத்தையும் குறித்தன. இக்கொடி, ‘நிவேதிதையின் கொடி’ என்றழைக்கப்பட்டது.


பின், 1906 ல் நீலம், மஞ்சள், சிவப்பு என்று நிறபட்டைகளைக் கொண்ட சுதந்திரக் கொடி வடிவமைக்கப்பட்டது. நீல நிறப் பட்டையில் எட்டு நட்சத்திரங்களும் சிவப்பு பட்டையில் சூரியனும், நட்சத்திரமும், மஞ்சள் பட்டையில் தேவநாகரி எழுத்தில் வந்தே மாதரமும் பொறிக்கப்பட்டிருந்தன.


இந்திய தேசியக் கொடி, ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் என கூறப்படும், 24 கோல்களை கொண்ட சக்கரம் உண்டு.


கொடியை உருவாக்கியவர்அசோக சக்கரம், கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில், நான்கில் மூன்று பாக உயரத்தை கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும்.


இந்திய தேசியக் கொடியை உருவாக்கியவர் பிங்கலி வெங்கைய்யா. அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப்படுகிறது.



வாழ்வை குறிக்கும் சக்கரம்அசோக சக்கர சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னேறி செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்.


தேசியக் கொடியின் காவி நிறம், துாய்மையையும் கடவுளையும் குறிக்குமாறும், வெள்ளை நிறம் அமைதியையும் உண்மையையும் குறிக்குமாறும், பச்சை நிறம், புணர்ப்பையும், செம்மையையும் குறிக்குமாறு பொருள்படுகிறது.


 1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத்தை தலைவராகவும், மவுலானா அபுல் கலாம் ஆசாத், கே.எம். பணிக்கர், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரி, கே.எம். முன்ஷி, மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரையும் குழு நபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை, நியமிக்க விவாதித்தது.
23 ஜூன் 1947 அன்று தொடங்கிய அவ்விவாதம், மூன்று வாரங்களுக்கு பிறகு, 14 ஜூலை 1947 அன்று முடிவடைந்தது.


அதன் காரணமாக, அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியை சில மாற்றங்களூடன் இந்திய தேசிய கொடியாக ஏற்றது.
இந்திய தேசியக் கொடிக்கு எவ்வித மத சாயலும் இருக்கக் கூடாதென்று முடிவெடுக்கப்பட்டது. சாரனாத்தின் சாஞ்சி ஸ்தூபியில் உள்ள தர்ம சக்கரம் ஏற்கப்பட்டது. இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய தேசியக் கொடி, முதல் முதலாக சுதந்திர இந்தியாவில், 15 ஆகஸ்ட் 1947ஆம் நாள் ஏற்றப்பட்டது.




இந்தியா குடியரசு நாடான பிறகு, 1951-ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறை, சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப, மெட்ரிக் அளவு முறையாக 1964-ல் மாற்றப்பட்டது.இந்த அளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு (அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கிறது.



கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது, மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.



கொடிக்கு பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம் (உல்லன்) இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்க வேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.

இந்திய மக்களின் தேச பக்திக்கும், விடுதலைக்கும் கம்பீரமான சின்னமே நம் தேசியக் கொடி!


 நம் பாரம்பரியத்தின் அடையாளமாக பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்தி சுதந்திர பாரதத்தை கௌரவிப்போம்!

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H