புவனேஷ்வர்: ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என
மத்திய அரசுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கோரிக்கை
விடுத்துள்ளார்.பிளஸ் 2 மற்றும் இளங்கலை அறிவியல் படிப்பு முடிப்பவர்கள்,
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளில் சேர, தேசிய
அளவில் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான
தேர்வு, மே மாதம் நடப்பதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, செப்., 13ல்
நீட் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை ஒத்தி
வைக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி
செய்யப்பட்டன.இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கல்வி அமைச்சர்
ரமேஷ் பொக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதம்: கொரோனா பரவலுக்கு மத்தியில்
தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது.
இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். ஒடிசா
மாணவர்கள் 50 ஆயிரம் பேர், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜே.இ.இ.,
மெயின் தேர்வை 40 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். ஆவால், இதற்காக மாநிலத்தில் 7
நகரங்கள் மட்டுமே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.கொரோனா பரவலை
கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், உள்ளூர் போக்குவரத்தும்
பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







