
தொற்று நோய் தடுப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவர தமிழக சுகாதாரத்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள் நடைமுறையில் உள்ளநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை
கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ஏற்கனவே
புகைபிடித்தல், எச்சில் துப்புதல் போன்றவைக்கு அபராதம் உள்ளது.
இந்நிலையில் பொது இடங்கள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்கள்
போன்றவற்றில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மற்றும்
மக்கள் கூடும் வணிக நிறுவனங்களில் சுத்தம் செய்ய கிருமிநாசிணி வைக்காத
நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அபராத தொகையை உயர்த்தவும்
தொற்று நோய் தடுப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர முடிவு
செய்யப்பட்டுள்ளது.







