
NEET, JEE, தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா
பரவல் காரணமாக இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான NEET தேர்வு மற்றும் அகில
இந்திய பொறியியல் சேர்க்கைக்கான JEE தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர்,
செப்டம்பர் மாதம் NEET, JEE தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய அரசு
அறிவித்தது. இந்நிலையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அபாயம் அதிகரித்து
வருவதால், இரு தேர்வுகளையும் தள்ளிவைக்கோரி பல மாநிலங்கள் வலியுறுத்தி
வந்தன.
இருப்பினும், திட்டமிட்ட தேதிகளில் NEET மற்றும் JEE தேர்வுகள் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தும்
வகையில், நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம் நடைபெறும்
அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.







