தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad


https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Thursday, 24 September 2020

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, விருப்பத்தின்பேரில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு இவ்வாறு அறிவித்துள்ளது.

அதன்படி, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே மாணவர்கள் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் ஆசிரியர்கள் குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிகளுக்கு வரவழைக்க அறிவுறுத்தியுள்ள பள்ளிக்கல்வித்துறை, ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

newstm.in

1 comment:

  1. Buy Herbal Care Products online. We provide Natural Herbal Remedies, health and skin diseases information. Natural herbal products use men and women without side effects.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.