
குஜராத் மாநிலம் அகமதாபாத், மணி நகரில், கடந்த 1971-ம் ஆண்டு, தமிழ்
வழியில் கற்பிக்கும் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப்
பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறைந்ததாகக் கூறி அந்தப் பள்ளியை அம்மாநில
அரசு மூடுவதற்கு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாயின.முதல்வர்
பழனிசாமிஇந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குஜராத் முதல்வர்
விஜய் ரூபானிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார்.