உலகிலேயே கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 72 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதில் ஒரே நாளில் 91 ஆயிரத்து 723 பேருக்கு தொற்று உறுதி என்ற எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி 2ம் இடம் என்ற மோசமான இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
இதுவரை ஒரு கோடியே 93 லட்சத்து 67 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ள நிலையில், சுமார் 70 லட்சத்து 28 ஆயிரம் பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றன.







