மத்திய அரசிற்கு உட்பட்ட கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோவ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்சி வேளாண்மை துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் செப்டம்பர் 25ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். வேலை, வேலை.! எம்.எஸ்சி துறை பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! வேலை, வேலை.! எம்.எஸ்சி துறை பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! நிர்வாகம் : கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு பணி : Junior Research Fellow கல்வித் தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Microbiology, M.Sc Agriculture, M.Tech Biotechnology, M.Sc Life Science துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். வயது வரம்பு : ஆண் விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டும், பெண் விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : மாதம் ரூ.31,000 மற்றும்கூடுதல் பணப்பலன்கள் வழங்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://sugarcane.icar.gov.in/ என்ற இணையதளம் மூலம் 25.09.2020 தேதி மாலை 4.15 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : Dr. Govind P. Rao, PS, Div Pl Pathol, ICAR-Indian Agricultural Research Institute Pusa Campus, New Delhi - 110012. தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sugarcane.icar.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.