தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார்
பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர்.
இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம்
வகுப்பு வரைகட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார்
பள்ளிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 763 இடங்கள் உள்ளன. நடப்பு ஆண்டு
சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த ஆக.27-ம் தேதி தொடங்கியது.
இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளனர்.
செப்டம்பர் 25-ம் தேதி வரைமட்டுமே விண்ணப்பிக்க அவகாசம் உள்ளதால்
rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக பெற்றோர் விரைந்து
விண்ணப்பிக்குமாறு கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.







