தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரிமற்றும் கட்டிடவியல் வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியவை இயங்கி வருகின்றன.
இந்தக் கல்லூரிகளில் படிக்கும்மாணவர்கள் நடப்பு பருவத்துக்கான கல்விக் கட்டணங்களை செப்.3-ம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. கரோனா தொற்று சூழல் காரணமாக அவகாசத்தை நீட்டிக்க மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
உறுப்பு கல்லூரிக்கு செப்.23 வரை
அதையேற்று கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் செப்.19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 16 உறுப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் நடப்பு பருவத்துக்கான கட்டணத்தை செப்.23 வரை செலுத்திகொள்ள காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் கட்டணம் செலுத்த தவறும் மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.








