2020-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது
பெற்ற ஆசிரியர் திலீப், மாணவர்களுக்காகக் கடுமையாக உழைக்கும் அரசுப் பள்ளி
ஆசிரியர்களுக்கு இந்த விருது சமர்ப்பணம் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதைக் குடியரசுத் தலைவர் காணொலி மூலம் வழங்கினார். கரோனா பரவல் காரணமாக, ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் ஆட்சியர் முன்னிலையில் விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலீப் மற்றும் சென்னை, அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய இருவருக்கும் தனித்தனியே விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்றது குறித்து ஆசிரியர் திலீப் கூறும்போது, ''ஆசிரியர் தினமான இன்று (செப்.5) விருதைப் பெறுவதற்காக டெல்லியில் இருந்து முன்னதாகவே விருது கூரியர் செய்யப்பட்டது. இந்த நல்லாசிரியர் விருதைக் காணொலிக் காட்சி வழியே குடியரசுத் தலைவர் வழங்கினார். நாட்டின் முதல் குடிமகன் கையால் விருதை வாங்க முடியவில்லை என்று சற்றே வருத்தமாக இருந்தது.

எனினும் சொந்த மாவட்டமான விழுப்புரத்திலேயே குடும்பத்துடன் சென்று தேசிய
விருதைப் பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நல்லாசிரியர் விருதை
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள்
முன்னேற்றத்திற்காகக் கடுமையாக உழைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும்
அர்ப்பணிக்கிறேன். என் மாணவர்களே இந்த விருதுக்கான முதற்காரணம்'' என்றார்.
SOURCE www.hindutamil.in
SOURCE www.hindutamil.in