உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டறியும்
ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. Oxford ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த
கோவிஷீல்டு என்ற தடுப்பு ஊசியை பரிசோதிக்கும் முயற்சிகள் இந்தியாவில்
தொடங்கியுள்ளன.

இதில் சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக்காக கோவிஷீல்டு மருந்துகள் புனேவில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் 1600 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னையில் வந்திறங்கிய மருந்துகள் முதலில் யாருக்கு செலுத்தப்படும் என்ற
கேள்வி எழுந்துள்ளது. இந்த மருந்து செலுத்துவதால் பக்கவிளைவுகள் எதுவும்
ஏற்படுகிறதா என்பது குறித்த பரிசோதனைகள் அடுத்த வாரம் துவங்கப்படும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.newtm.in







