
உடலின் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பல வீடுகளில் தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க வேண்டும், அதே சமயம் மலிவான விலையில் உள்ள உணவு பொருட்களாகவும் அவை இருக்க வேண்டும். ரொம்ப யோசிக்காதீங்க… எல்லா உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச ஒன்னு தான். ஆமாங்க… கீரையை பற்றி தான் சொல்றோம். குறைந்த விலையில் அதிக நன்மை தரக்கூடிய கீரையை தினமும் சாப்பிட்டால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
■இன்றைய காலக்கட்டத்தில் உலகில் உள்ள பலர் தங்களது உடல் எடையை எப்படி குறைப்பது என தெரியாமல் விழித்து கொண்டு இருக்கிறார்கள். குறைவான கலோரிகள் கொண்ட கீரை அவர்களுக்கான சரியான உணவு. உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பையும் கரைக்கிறது. இதன் மூலம் உங்கள் உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்.
■இரத்த ஓட்டத்தை சீராக வைக்க கீரை உதவுகிறது. இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் சரியான அளவிற்கு காரணமான இரும்புச்சத்து கீரையில் அதிக அளவில் உள்ளது. அது மட்டுமல்ல இரத்தத்தின் அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கீரைக்கு உண்டு.
■நம் சருமம் அழகாக தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது கொலாஜன். இந்த கொலாஜனின் உற்பத்தியை அதிகப்படுத்த கீரை உதவுகிறது. எனவே உங்கள் சரும பளபளப்பை மேம்படுத்தி, மென்மையான சருமம் வேண்டும் என்றால் தினமும் கீரை சாப்பிடுங்கள்.
■கீரையானது நம் உடலை மட்டும் அல்லாமல் நமது மனதின் ஆரோக்கியத்தையும் சேர்த்து கவனித்து கொள்கிறது. மன அழுத்தம் உள்ளவர்கள் கீரையை தினமும் சாப்பிட்டு வர மனதிற்கு ஒரு வித அமைதி கிடைத்து மனதை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.
■இன்று பல பெண்கள் எலும்பு சம்மந்தமான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு நோய் ஏற்படுகிறது. கீரையில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுவதால் எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறது.
■டிவி, மொபைல் என அதிகப்படியான கேட்ஜெட் பயன்பாடு காரணமாக பலரும் இன்று கண்ணாடி அணியும் அவலம் ஏற்பட்டுள்ளது. கீரையில் லூடின் மற்றும் ஜீயாக்சாண்டின் அதிக அளவில் உள்ளது. இது அனைத்து கண் சம்பந்தப்பட்ட குறைப்பாட்டை சரி செய்கிறது.








