தேசிய கல்விக் கொள்கை பள்ளிக் கல்வி செயல் திட்டம் .|National Education Policy School Education -Action Plan - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


தேசிய கல்விக் கொள்கை பள்ளிக் கல்வி செயல் திட்டம் .|National Education Policy School Education -Action Plan

தேசிய கல்விக் கொள்கைபள்ளிக் கல்வி செயல் திட்டம்* தொலைநோக்கு பார்வை மற்றும் முக்கிய குறிக்கோள்கள்* முன் குழந்தை பருவ கல்வி மற்றும் உலகளாவிய அணுகுமுறை* குழந்தைகள் எப்படி கற்பர் - பாடதிட்டங்கள் மற்றும் ஆசிரியரியல் கட்டமைப்பு* பாட திட்டம் - கற்றலின் வெளிப்பாடு - போட்டித் திறன்* பள்ளிகள் - வளாகங்கள் - அங்கீகாரம்* ஆசிரியர்கள் - கல்வி மற்றும் மேம்பாடு* புதிய கல்விக் கொள்கை - புதிய அம்சங்கள்* முக்கியமாக கவனிக்க வேண்டிய பகுதிகள் - சமத்துவம் - பாலியல் - சிறப்பு தேவைகள்* இலக்குகள் மற்றும் செயல் திட்டங்கள்-தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்1. உயர் தரமான கல்வியை அனைவருக்கும் அளிப்பதன் மூலம், சமமான மற்றும் உயிர்ப்புடன் கூடிய அறிவுசார் சமூகத்தை உருவாக்குதல்2. அடிப்படை உரிமைகள், கடமைகள் மற்றும் அரசியல் சாசனத்தின் மதிப்புகள் குறித்த ஆழ்ந்த மரியாதையை உருவாக்குதல். நாட்டுடன் பிணைந்திருப்பது, மாறிவரும் உலகில் தன் பங்கு மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்துவது3. மனித உரிமைகள், நீடித்த நிலையான வளர்ச்சியுடன் கூடிய வாழ்க்கை, உலகின் நலன் ஆகியவற்றை தங்களுடைய பொறுப்புகளாக உணரும் வகையில், திறன்கள், பண்புகளை, விழுமியங்களை ஏற்படுத்துவது. இதன் மூலம், மிகச் சிறந்த, உண்மையான உலகக் குடிமகன்களாக மாணவர்களை மாற்றுதல்தேசியக் கல்விக் கொள்கையின் முக்கிய குறிக்கோள்கள்அரசுகள் மீது மரியாதைஅனைத்து பாடத்திட்டங்கள், ஆசிரியரியல் மற்றும் கொள்கைகளில் இடம்பெறும்.சமமாக நடத்துதல் மற்றும் இணைத்து செயல்படுவதுஅனைத்து கல்வி முடிவுகளிலும் முக்கியமாக இடம்பெறும்.சமூகத்தின் பங்களிப்புநன்கொடையாளர்கள், தனியார் மற்றும் சமூகத்தின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்.தொழில்நுட்பத்தின் பயன்பாடு - கற்பித்தல் மற்றும் கற்பதிலும், மொழித் தடையை நீக்குவதிலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையிலும் பயன்படுத்தப்படும். மேலும், கல்வியியல் திட்டமிடல் மற்றும் நிர்வாகத்திலும் பயன்படுத்தப்படும்.கருத்துருவை புரிந்துக் கொள்வது வலியுறுத்தப்படும் - வெறும் மனப்பாடம் செய்து கற்றுக் கொள்ளுதல் மற்றும் தேர்வுக்காக படிப்பதற்கு மாற்றாக, இவை வலியுறுத்தப்படும்.தனித் திறன்கள் - ஒவ்வொரு மாணவரின் தனித் திறன்கள் கண்டறிந்து, ஊக்குவிக்கப்படும்.சிந்தித்தல் மற்றும் புதிய சிந்தனை - சூழ்நிலைக்கேற்ப சரியான முடிவுகளை எடுத்தல், புதுமையாக, வித்தியாசமாக சிந்தித்தல் ஊக்குவிக்கப்படும்.தொடர் மதிப்பீடுகள் - கல்வி நிபுணர்களின் நீடித்த ஆராய்ச்சி மற்றும் தொடர் கணிப்பீடுகளின்படி செய்யப்படும்.முன் குழந்தை பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான உலகளாவிய அணுகுமுறை உலகளாவிய அணுகுமுறை - 3 - 6 வயது குழந்தைகள் - அங்கன்வாடிகள், முன்கல்வி பள்ளிகள், பால்வாடிகா மூலம், இலவச, பாதுகாப்பான, உயர் தரமுள்ள முன் குழந்தை பருவ கவனிப்பு மற்றும் கல்வி வழங்கப்படும்.

அடித்தள கல்வி பாடதிட்டம் - 3 - 8 வயது பிரிவு இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. 3 - 6 வயதுரை வரை, முன் குழந்தை பருவ கவனிப்பு மற்றும் கல்வியின் கீழ் இருப்பர். 6 - 8 வயது வரை, துவக்கப் பள்ளியில், 1, 2ம் வகுப்பில் இருப்பர்.பன்முகத்தன்மை - கட்டுப்பாடுகளற்ற, பல நிலை, விளையாட்டை அடிப்படையாக கொண்ட, நேரடி செயல் விளக்கம் மூலமாக, கேள்விகள் கேட்டு கற்கும் விதமாக இருக்கும். தயார்படுத்துதல் வகுப்புகள் -தனது, 5வது வயதுக்கு முன்பாக, அதாவது, 1ம் வகுப்புக்கு முன்பாக, ஒவ்வொரு குழந்தையும், தயார்படுத்துதல் வகுப்புகள் அல்லது பால்வாடிகாவில் இருப்பர்.மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, பழங்குடியினர் விவகாரம் ஆகியவை இணைந்து செயல்படும்.கல்விக்கான உலகளாவிய அணுகுமுறை அனைத்து நிலைகளிலும் கிடைப்பதை உறுதி செய்தல்அனைத்துக் குழந்தைகளுக்கும் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்தல்பல்வகை பாதைகள் - கற்பதற்கான பல்வகை பாதைகளை உருவாக்குதல்.

வழக்கமான மற்றும் முறைசாரா கல்வி முறைகளின் மூலம்.பள்ளிகள் கட்டமைப்பு - அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் மூலம் பள்ளிகள் கட்டப்படுவது ஊக்குவிக்கப்படும்.கற்றலின் வெளிப்பாடு - அனைத்து நிலைகளிலும், நிர்ணயிக்கப்பட்ட கற்றல் வெளிப்பாடுகளை உறுதி செய்தல்.படிப்பை நிறுத்தியோர் - பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியோரை, மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை.மாற்று மையங்கள் - மாற்று மற்றும் புதுமையான கல்வி மையங்கள்.நிகரற்ற பயிற்சி - அனைத்து வகை தொழில்கள் மற்றும் தனிப்பட்ட திறனை வளர்க்கத் தேவையான பயிற்சி.எதிர்பார்க்கப்படும் பலன்கள்* அனைவருக்குமான அணுகுமுறை - முன்பருவக் கல்வி முதல் உயர்நிலை வரை* சமமான மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்தல்* பாதியில் படிப்பை நிறுத்திய, 2 கோடி பேரை மீண்டும் சேர்ப்பது* உயர்நிலை பள்ளி வரை, மாணவர்களை தக்க வைப்பது* தரமான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்களை அறியும் அறிவை உருவாக்குவதல்* கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீடுகளில், 21ம் நூற்றாண்டின் திறன்களை புகுத்துதல்* ஆதாரங்களை பகிர்ந்து கொள்ளுதல் - பள்ளி வளாகங்கள்* அதிகார பகிர்ந்தளித்தல் மற்றும் பொதுவான விதிகளில் சிறப்பான நிர்வாகம்* கற்றலில், மொழி ஒரு தடையாக இருப்பதை நீக்குவது* பொது மற்றும் தனியார் பள்ளி கல்விக்கு பொதுவான தரத்தை நிர்ணயிப்பது குழந்தைகள் எப்படி கற்பர்?பாடதிட்டம் மற்றும் ஆசிரியரியல் கட்டமைப்பில் மாற்றம்ஏற்கனவே உள்ள கல்வி கட்டமைப்பு புதிய கல்வி கட்டமைப்புஅடித்தள பருவம் 2 ஆண்டுகள் - 1, 2ம் வகுப்பு - 6 முதல் 8 வயது. 3 ஆண்டுகள் - அங்கன்வாடி, பால்வாடி, பிரீ ஸ்கூல் - 3 முதல் 6 வயது.தயார்படுத்துதல் பருவம் - 3 ஆண்டுகள் - 3 முதல் 5ம் வகுப்பு வரை - 8 முதல் 11 வயது வரை.நடுநிலைப் பள்ளி பருவம் - 3 ஆண்டுகள் - 6 முதல் 8ம் வகுப்பு வரை - 11 முதல் 14 வயது வரை.உயர் நிலை பள்ளி பருவம் - 4 ஆண்டுகள் - 9 முதல் 12ம் வகுப்பு வரை - 14 முதல் 18 வயது வரை.----பள்ளிக் கல்விக்கான, புதிய ஆசிரியரியல் மற்றும் பாட திட்ட கட்டமைப்பு : 3 ஆண்டுகள், அங்கன்வாடி, முன் பள்ளி பருவம் மற்றும் !2 ஆண்டுகள் பள்ளியில்.* உயர்நிலை பருவம் (4 ஆண்டுகள்) - பல பிரிவு பாடங்கள், சிந்தனையைத் தூண்டும் பயிற்சி, மாணவர்களே பாடங்களை தேர்வு செய்யும் வாய்ப்பு* நடுநிலைப் பள்ளி பருவம் (3 ஆண்டுகள்) - அறிவியல், கணிதம், கலை, சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் பாடங்களில் பரிசோதனை முறையிலான கற்பித்தல்* தயார்படுத்துதல் பருவம் (3 ஆண்டுகள்) - விளையாட்டு, கண்டுபிடித்தல் மற்றும் நடவடிக்கைகளுடன் இணைந்த, கலந்துரையாடும் வகையிலான வகுப்பறை கற்பித்தல்* அடித்தள பருவம் (5 ஆண்டுகள்) - பல நிலை, விளையாட்டு மற்றும் நடவடிக்கை சார்ந்த கற்றல்.---------------------* முன் குழந்தை பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான (ஈ.சி.சி.இ.) வரைவுதிட்டம் என்.சி.பி.எப்.இ.சி.இ., முன் குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கும்.ஆராய்ச்சி மற்றும் சிறந்த செயல்பாடுகள்ஈ.சி.சி.இ., தொடர்பான சமீபத்திய ஆராய்ச்சிகள் மற்றும் தேசிய, சர்வதேச அளவிலான சிறந்த செயல்பாடுகள், என்.சி.பி.எப்.இ.சி.இ.,யில் நடைமுறைபடுத்தப்படும்.பல்முனை செயல்திட்டம்எழுத்துக்கள், மொழிகள், எண்கள், எண்ணுதல், நிறங்கள், வடிவங்கள், விளையாட்டுகள், புதிர்கள், சிந்தனையைத் தூண்டுதல், பிரச்னைக்கு தீர்வு காணுவதல், ஓவியம், வர்ணம் தீட்டுதல் மற்றும் இதர கலைகள், கைவினைகள், நாடகம் மற்றும் பொம்மலாட்டம், இசை உள்ளிட்டவை அடங்கியதாக இருக்கும்.பள்ளி தயார்படுத்துதல் அலகுஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான, மூன்று மாத, விளையாட்டுடன் கூடிய, பள்ளி தயார்படுத்துதல் அலகை, என்.சி.இ.ஆர்.டி., உருவாக்கும்.முன் குழந்தைப் பருவக் கல்வி : முதல் ஆண்டுகளில் கற்பித்தல்-- ஆர்வத்தை வளர்த்தல்- தர்க்க ரீதியில் சிந்தித்தல் மற்றும் பிரச்னைகள் தீர்த்தல்- கலை, கைவினை மற்றும் இசை- இயற்கையுடன் உறவு- நிறங்கள், வடிவங்கள், எழுத்துக்கள் மற்றும் எண்கள்- கூட்டாக இணைந்து செயல்படுதல்- விளையாட்டுடன் கூடிய மற்றும் கண்டுபிடிப்புடன் கூடிய கற்றல்- நன்னெறி- தன்னை அறிதல்- தூய்மையாக வைத்திருத்தல், நன்னடத்தை மற்றும் உணர்வுகளை வளர்த்தல்--------3ம் வகுப்பின்போது, அடிப்படை கல்வி மற்றும் கணித அறிவை ஏற்படுத்தும் இயக்கம்அடிப்படை திறன்கள் - அடிப்படை கற்கும் திறன்களை ஊக்குவித்தல்தேசிய இயக்கம் - அடிப்படை கல்வி மற்றும் எண் கணித அறிவை உருவாக்க தேசிய அளவிலான இயக்கம்புத்தக ஊக்குவிப்பு - தேசிய புத்தக ஊக்குவிப்பு கொள்கை உருவாக்கப்படும். தனியார் மற்றும் பள்ளி நூலகங்கள் விரிவுபடுத்தப்படும்முன்னதாகவே கற்றல் - முன்னதாகவே படிக்க, எழுதவும், கணிதத்தை புரிந்து கொள்ளவும் முக்கியத்துவம்3 மாத விளையாட்டுடன் கூடிய பள்ளி - ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், மூன்று மாதங்கள் விளையாட்டுடன் கூடிய பள்ளி அளவிலான பயிற்சி முறை அறிமுகம்தேசிய களஞ்சியம் - தீக் ஷாவில், உயர் தரத்துடன் கூடிய கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான ஆதராங்களின் தேசிய களஞ்சியம் உருவாக்கப்படும்நூலகங்கள் - பள்ளிகளில் நூலகங்கள், குறிப்பாக, டிஜிட்டல் மயமாக்கப்பட்டவையாக உருவாக்கப்படும்---------------------பாட திட்டங்கள்பாட திட்டங்கள் குறைப்பு முக்கிய தேவைகள் - அனைத்துப் பாடப் பிரிவுகளிலும், அடிப்படையான, முக்கியமானவை மட்டுமே இருக்கும். மற்றவை நீக்கப்படும்.நுட்பமான சிந்தனை - சிறப்பான கல்வி அளிக்கும் வகையில், நுட்பமான சிந்தனை, கேள்விகளை எழுப்புவது, கண்டுபிடிப்பது, விவாதிப்பது மற்றும் ஆய்வு செய்வதாக கற்றல் மற்றும் கற்பித்தல் இருக்கும்.கலந்துரையாடல் வகுப்புகள் - பாடபுத்தகங்களை மட்டுமே படிக்காமல், மாணவர்கள் தங்களுக்குள் கலந்துரையாடி விவாதிக்க வாய்ப்பு தரப்படும்.

மாணவர்கள் அதிக கேள்விகளை எழுப்ப ஊக்குவிக்கப்படும். அனுபவ படிப்பு - மாணவர்கள் அனுபவம் பெறும் வகையிலும், ஆழ்ந்து கற்கும் வகையில், விளையாட்டாகவும், அதே நேரத்தில் புதுமையான முறையில், ஒருங்கிணைந்து, பரிசோதனை முறையில் கற்பிக்கப்படும்.* பாட திட்டங்கள் மற்றும் ஆசிரியருக்கான பயிற்சிகள், 2022ம் ஆண்டுக்குள் மாற்றப்படும். மனப்பாடம் செய்வது குறைக்கப்பட்டு, திறன்களை ஊக்குவிக்கும் வகையில் மாற்றப்படும்* பள்ளிக் கல்விக்கான வரைமுறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கான வரைமுறைகள், 2021ல் மாற்றப்படும்.கற்றலின் வெளிப்பாடு, போட்டி, பாடங்கள் - ஒருங்கிணைப்புபோட்டி சார்ந்த கல்வி - போட்டிகள் அடிப்படையிலும், கற்றலின் வெளிப் பாடுகளின் அடிப்படையிலுமான கல்வியை கற்றுத் தரும் வகையில், திட்டம் உருவாக்கப்படும். பாடங்கள் ஒருங்கிணைப்பு - கலைகள், விளையாட்டு, கம்ப்யூட்டர், கதைகள் மூலம் கற்பிப்பது என, பாடங்கள் ஒருங்கிணைத்து, கற்பித்தல் முறை மாற்றப்படும்.அறிவியல் திறனை மேம்படுத்துதல் - மாணவர்களின் அறிவியல் திறன் மேம்படுத்தப்படும்.

அதே நேரத்தில், தேசப்பற்று, தியாகம், அஹிம்சை, உண்மை, நேர்மை, அமைதி போன்ற வாழ்க்கைக்கு தேவையான குணங்கள் மற்றும் அரசியலமைப்பின் பண்புகளை வளர்க்கவும் கற்றத் தரப்படும்.பாடங்கள், கற்றலில் பாகுபாடு கிடையாது - பாடங்கள் இடையே எந்த வேறுபாடும், பாகுபாடும் இருக்காது:- பாடங்கள்/துணைப் பாடங்கள்/கூடுதல் பாடங்கள்- கல்வி முறை/ தொழில் கல்வி- அறிவியல்/மானுடவியல்- விளையாட்டு/கலை/கல்விடிஜிட்டல் கல்வியறிவுக்கு முக்கியத்துவம் - டிஜிட்டல் கல்வியறிவு, கம்ப்யூட்டர் அறிவு, நன்னெறி மற்றும் நேர்மையான செயல்பாடு ஊக்குவிக்கப்படும்.பல மொழி கல்வி ஊக்குவிக்கப்படும் - மாணவர்கள் பல மொழிகளை கற்க ஊக்குவிக்கப்படும். மொழி ஆசியர்களுக்காக, மற்ற மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்ய மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.மனம் மற்றும் உடல் நலம் மற்றும் சுகாதாரம்உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து, உடற் பயிற்சி, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது, விளையாட்டு ஆகியவற்றில் திறனை வளர்த்துக் கொள்வது கட்டாயமாக்கப்படும்.உடல் நலப் பரிசோதனை - அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனை.புத்தக பை எடை குறைப்பு - மாணவர்களின் புத்தக பை சுமையை குறைக்கும் வகையில், பாட திட்டங்கள் மற்றும் கற்பிக்கும் முறை மாற்றி அமைக்கப்படும்.கல்வி மற்றும் தூய்மை கட்டாயம் - சுகாதாரம், ஊட்டச்சத்து, தூய்மை, உடற் பயிற்சி, விளையாட்டு ஆகிய திறன்கள் மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படும். மேலும், நோய்த் தடுப்பு, சுகாதார சேவை, மனநலம், முதலுதவி, தனிப்பட்ட மற்றும் பொது தூய்மை பராமரிப்பதும், பாடதிட்டத்தில் சேர்க்கப் படும். ஆலோசகர்கள் நியமனம் - மாணவர்கள் உடல் மற்றும் மன நலத்தை பேணும் வகையில், ஆலோசகர்களை நியமிக்க, மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.

இவர்களை பள்ளிகள் பகிர்ந்து கொள்ளலாம்.மாற்றுத் திறனாளிகள் - மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேவையான வசதிகள் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும். சேர்ந்து பழகும் கலாசாரம் - மாணவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையாக, சேர்ந்து பழகும் கலாசாரத்தை, ஆசிரியர்களும், தலைமையாசிரியர்களும் உருவாக்க வேண்டும்.புதுமையான கற்பித்தல் - ஆசிரியர்கள் கற்கும் முறையில் மாற்றம்சோதனை அடிப்படையிலான கற்றல் - சோதனை அடிப்படையிலான, கேள்வி கேட்கும் மற்றும் கண்டுபிடிக்கும் திறன்களை உருவாக்கும் வகையில், ஆசிரியர்களுக்கான பயிற்சி இருக்கும்.ஒருங்கிணைந்த கற்பித்தல் முறை - கலை, விளையாட்டு, கதை சொல்லுதல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒருங்கிணைந்த கற்பித்தல் முறை.தனிப்பட்ட கற்பித்தல் ஊக்குவிப்பு - மாணவர்கள் தாங்கள் கற்றதை மற்றவர்களுக்கு கற்றுத் தருவதை, ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். இது தன்னார்வமாக, ஆர்வமான நடவடிக்கையாக இருக்க வேண்டும். அனைத்துக்கும் முக்கியத்துவம்- பாட திட்டங்கள், துணை பாடம் மற்றும் கூடுதல் பாடங்கள் இடையே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது.- தாங்கள் விரும்பிய பாடங்களின் தொகுப்பை தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.

பைகள் இல்லா தினம் - கல்வியாண்டில் சில நாட்களை, பைகள் இல்லாத தினமாக இருப்பதை உறுதி செய்யய வேண்டும்.தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு - 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான கற்பித்தலில், தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகமாகவும், ஒருங்கிணைந்ததாகவும் இருக்க வேண்டும்.பாடபுத்தகங்களில் மாற்றம்அனைத்து பாட புத்தகங்களும், அது தொடர்பான அடிப்படை மற்றும் முக்கியமானவையே இடம்பெற வேண்டும். அதையும் தாண்டி இடம்பெறும் தகவல்கள், அந்தந்த பகுதிக்குட்பட்டதாகவே இருக்க வேண்டும்.அனைத்து புத்தகங்களும் தரமானதாக, வாங்கும் விலையில் இருக்க வேண்டும். இதைத் தவிர, தீக் ஷா இணையதளத்திலும், டிஜிட்டல் வடிவில் அது இடம்பெற வேண்டும்.என்.சி.இ.ஆர்.டி., கல்வித் திட்டத்துக்கு ஏற்ப, மாநிலங்கள் தங்களுடைய பாட புத்தகங்களை உருவாக்கி கொள்ளலாம். தேவைக்கேற்ப, அந்தந்த பகுதி தொடர்பானவற்றையும் சேர்த்து கொள்ளலாம்.புத்தக பை மற்றும் புத்தகத்தின் எடையைக் குறைக்கும் வகையில், கற்பித்தல் மற்றும் பாட திட்டத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.எதிர்வரும் துறைகளில், நாட்டின் எதிர்காலம் மற்றும் தலைமைப் பண்பு பங்களிப்புகம்ப்யூட்டர் சிந்தனை - பள்ளி கல்வியில், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் வேகத்தில் தீர்வு காணும் சிந்தனை ஊக்குவிக்கப்படும்.

கணிதத்தின் மூலம் தீர்வு - கணித சிந்தனை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஊக்குவிக்கப்படும். புதிர்கள் மற்றும் விளையாட்டுகள் மூலம், இது செய்யப்படும்.கம்ப்யூட்டர் சிந்தனை - கோடிங் எனப்படும் குறியீட்டு முறை உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படும்.சமகால படிப்புகள் அறிமுகம் - நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், சமகால படிப்புகள் கற்றுத் தரப்படும். செயற்கை நுண்ணறிவு, வடிவமைப்பு, சுற்றுச்சூழல் கல்வி, இயற்கை வேளாண்மை, சுகாதாரம் உள்ளிட்டவை சேர்க்கப்படும்.இந்தியாவின் அறிவு- அறிவியல் உள்பட அனைத்து துறைகளிலும் புகழ்பெற்ற நாட்டின் பெரும் தலைவர்களின் வாழ்க்கை குறித்த, 'வீடியோ' டாக்குமென்டரி உருவாக்கப்படும்.- பிரச்னைகளுக்கு நெறியுடன் கூடிய தீர்வு காணும் திறன், இளம் வயதிலேயே உருவாக்கப்படும்.- ஏமாற்றுதல், வன்முறை, அசுத்தப்படுத்துவது, சகிப்புதன்மை, சமதர்மம் என, பல்வேறு பிரச்னைகள் குறித்து, அடுத்து வரும் வகுப்புகளில் கற்றுத் தரப்படும். இவற்றுக்கான தீர்வு குறித்து ஆராய கற்றுத் தரப்படும்.- நாட்டின் பாரம்பிய மரபுகள், அடிப்படை மனித பண்புகள் குறித்தும், அரசியலமைப்பின் மாண்புகள் குறித்தும் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும்.- அரசியலமைப்பின் சில பிரிவுகளும், மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும்.- சுகாதாரம், மன நலம், ஊட்டச்த்து, தனிநபர் மற்றும் பொது சுகாதாரம், இடர்ப்பாடுகளின்போது செயல்பாடு, முதலுதவி உள்ளிட்டவற்றில், அடிப்படை பயிற்சி அளிக்கப்படும்.- தேவையான இடங்களில், துல்லியமாக மற்றும் அறிவியல் பூர்வமாக பாடங்கள் சேர்க்கப்படும்.- இந்தியாவின் அறிவு சார் முறைகள், குறிப்பாக, மலைவாழ் மக்களின் அறிவு மற்றும் கற்றலில் நம் நாட்டில் உள்ள எளிமையான முறைகள் சேர்க்கப்படும்.- பழங்குடியினரின் மருத்துவ முறைகள், வன நிர்வாகம், பாரம்பரிய இயற்கை வேளாண்மை முறை போன்றவை தொடர்பான பாடங்களும் இடம்பெறும்.- பழங்கால இந்தியாவில் இருந்து நவீன இந்தியா வரையிலான அறிவுடன், எதிர்கால எதிர் பார்ப்பும் பாடதிட்டத்தில் சேர்க்கப்படும்.- மது வகைகள், புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நேரடி பரிசோதனை முறையில் மாணவர்களுக்கு விளக்கப்படும்.1 முதல் 8ம் வகுப்பு வரையில் தேர்வு முக்கிய கட்டங்களில் மதிப்பீடு - மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து, 3, 5, 8ம் வகுப்புகளின் போது, மதிப்பீடு செய்யப்படும்.

கற்றல் குறித்த மதிப்பீடுகள் - மாணவர்களின், கற்றலின் வெளிப்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பரிசோதிக்கப்படும்.மனப்பாடத்தில் இருந்து வெளியேற்றம் - முக்கிய அடிப்படைகளில் திறன் மற்றும் அறிவு, வாழ்க்கை நடைமுறையில் திறன்களை பயன்படுத்துதல் ஆகியவை குறித்து மதிப்பிடப்படும். வழக்கமான, மனப்பாட கல்வி முறையில் இருந்து வெளியேறப்படும்.பள்ளி தேர்வு முடிவுகள் -பள்ளித் தேர்வு முடிவுகள் என்பது, மாணவர்களின் முன்னேற்றத்தை கணிப்பதாகவும், தொடர்ந்து முன்னேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமே இருக்கும். மேலும், கல்வி முறையில் தேவைப்படும் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதாகவும் இருக்கும்.வாரியத் தேர்வுகள் முதல் 9 - 12 வகுப்பு வரையிலான தேர்வுகளில் சீர்திருத்தம்மாணவர்களின் முக்கிய திறமை மற்றும் போட்டித் திறன் மட்டுமே பரிசோதிக்கப்பட உள்ளது. அதனால், வாரியத் தேர்வுகள், எளிமையாக இருக்கும்.பல்வேறு எளிமையான முறைகள் அறிமுகம் குறித்து ஆராயப்படும்.

ஆண்டுக்கு ஒருமுறை அல்லது செமஸ்டர் முறையில் தேர்வு நடத்துவது குறித்து ஆராயப்படுகிறது. திறனறி தேர்வு முறை மற்றும் விளக்கமுறை தேர்வு முறை என, இரண்டு பகுதிகளாக நடத்துவது குறித்தும் ஆராயப்படுகிறது.மாநில கல்வி வாரியங்கள், பராக் உள்ளிட்டவற்றுடன் ஆலோசனை நடத்தி, இது தொடர்பான வழிகாட்டுதலை, என்.சி.இ.ஆர்.டி., இறுதி செய்யும்.கணிதத்தில் துவங்கி, அனைத்து பாடங்களுக்கும், இரண்டு நிலைகளில் தேர்வு நடத்தப்படும். வரும், 2022 - 23 கல்வியாண்டு முதல் மதிப்பீட்டு முறைக்கு மாறுவதற்கு, ஆசிரியர்களை தயார்படுத்த வேண்டும்.கற்போரின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், கல்வியியல் தரத்தை கல்வி வாரியங்கள் உருவாக்க வேண்டும்.பராக் தேசிய மையத்தின் மூலம், பள்ளி வாரியங்களுக்கான தரம், விதிமுறைகள் உள்ளிட்டவை உருவாக்கப்படும்.மதிப்பீட்டு கலாசாரத்தில் சீர்திருத்தம்- ஒவ்வொரு குழந்தையின் கற்கும் வெளிப்பாட்டின் அளவு தொடர்ந்து கவனிக்கப்படும்.- முக்கிய திறன்களை மதிப்பீடு செய்வதால், வாரியத் தேர்வுகள் மிகவும் சுலபமாகவும், இணக்கமுள்ள தாகவும் இருக்கும்.- முக்கிய பாடங்களில், மாணவர்களின் உயர் திறமை மற்றும் அடிப்படை திறன்கள் அடிப்படையில் மதிப்பீடுகள் இருக்கும்.- செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலமாக, மாணவர்களின் முன்னேற்றம், தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதன் மூலம், தங்களுடைய எதிர்கால திட்டங்களை மாணவர்கள், தாங்களே உருவாக்கி கொள்ள முடியும்.- தேசிய மதிப்பீட்டு மையம் - பல்வேறு மதிப்பீட்டு வாரியங்கள் நடத்தும் வாரியத் தேர்வுகளை ஒருங்கிணைக்க உதவும்.- சுய மதிப்பீடு மற்றும் நிகரற்ற மதிப்பீடுகள்.- தேசிய சோதனை அமைப்பு.

தேர்வுகளுக்கு பயிற்சி மையங்களுக்கு மாணவர்கள் செல்வதை தடுக்கும் வகையில், உயர் தர பொது திறனறி தேர்வுகளை, இந்த அமைப்பு நடத்தும்.ஒருமுகபடுததப்பட்ட தேர்ச்சி அட்டை- அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மாணவர்களுக்கான தேர்ச்சி அட்டைகளில் மாற்றம் செய்ய உள்ளன. ஒருமுகபடுத்தப்பட்டதாக, பல்வேறு தகவல்கள் அடங்கியதாக இது இருக்கும்.- தேர்ச்சி அட்டைகளில், சுய மதிப்பீடு, முன்னோடிகளின் மதிப்பீடு மற்றும் ஆசிரியரின் மதிப்பீடு ஆகியவை இருக்கும்.- மாணவர்களின் முன்னேற்றம், கற்றுக் கொள்வதில் அவர்களுடைய ஆர்வம், அறிவாற்றல் உள்ளிட்டவை அதில் இடம்பெறும்.- வினாடி வினா போட்டி, குழுவாக செயல்படுவது, சுய விபரம் தயாரித்தல் உள்ளிட்டவற்றில் மாணவர்களின் செயல்பாடுகள், கற்கும் ஆர்வம் ஆகியவையும், தேர்ச்சி அட்டைகளில் இடம்பெறும்.- இந்த ஒருமுகபடுத்தப்பட்ட தேர்ச்சி அட்டைகளில், பெற்றோரும் முழுமையாக பங்கேற்கலாம். தங்களுடைய குழந்தையின் கல்வி மற்றும் வளர்ச்சி குறித்து அவர்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்படும்.- செயற்கை நுண்ணரிவு மென்பொருள் மூலமாக, மாணவர்களின் முன்னேற்றம், தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதன் மூலம், தங்களுடைய எதிர்கால திட்டங்களை மாணவர்களே உருவாக்கி கொள்ள முடியும்.பல மொழி கற்றல் மற்றும் தாய்மொழி கல்வியும்- ஐந்தாம் வகுப்பு வரையும், வாய்ப்புள்ள இடங்களில், 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும், தாய் மொழி அல்லது பிராந்திய மொழி வழியில் கற்பிக்கப்படும்.- இந்திய மொழிகள் என்ற பொழுதுபோக்கு திட்டம் மற்றும் நடவடிக்கையில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும்.- மும்மொழி கல்வி திட்டத்தை கற்பிப்பது தொடர்பாக, அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் முடிவு செய்யலாம்.- அனைத்து செம்மொழிகளும், பள்ளிகளும் தேர்வு மொழியாக இருக்கும்.பள்ளிகள்பள்ளி வளாகங்கள்/தொகுப்புபால பவன் - பால பவன்கள் வலுப்படுத்தப்படும் அல்லது புதிதாக உருவாக்கப்படும்.

கலை சார்ந்த, தொழில் சார்ந்த, விளையாட்டுடன் கூடிய நடவடிக்கைகளில் அனைத்து வயதினரும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.சமாஜிக் சேத்னா கேந்திரா - பள்ளிகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள பகுதிகள், சமாஜிக் சேத்னா கேந்திரா அமைக்கப்படும். அங்கு, சமூக, தொண்டு சேவைகள் மேற்கொள்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.பகிர்ந்து கொள்ளுதல் - பள்ளிகள் இடையே கட்டடம் மற்றும் மனித வளத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.செயல்திறன் - பள்ளிகளின் செயல் திறனை அதிகரிக்கவும், ஆதாரங்களை முழுமையாக பயன்படுத்தவும், தேவையான இடங்களில் பள்ளி வளாகங்கள் கட்டப்படும்.திட்டமிடல் - குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் உருவாக்கப்படும்.நிர்வாகம் - பள்ளிகளில் திறன்மிக்க நிர்வாக நடைமுறை இருக்கும்.ஒருங்கிணைப்பு - அனைத்து நிலைகளிலும் சிறந்த கல்வியை அளிக்கும் வகையில், பள்ளி கட்டடங்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்படும்.இணை பள்ளிகள் - நாடு முழுதும், ஒரு தனியார் பள்ளி மற்றும் ஒரு அரசு பள்ளி இடையே இணைப்பு ஏற்படுத்தப்படும்.தர நிர்ணயம் மற்றும் அங்கீகாரம்1.- மாநில பள்ளி தர ஆணையம் அமைக்கப்படும்.- மாநில பள்ளி தர ஆணையம் மற்றும் பள்ளியின் இணையதளத்தில், பள்ளியில் உள்ள அனைத்து தகவல்களையும் சுயமாக வெளியிட வேண்டும்.2. ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்ச தொழில்முறை மற்றும் தர நிர்ணயத்தை கடைபிடிப்பது உறுதி செய்யப்படும்.3.- எஸ்.சி.இ.ஆர்.டி., மற்றும் என்.சி.இ.ஆர்.டி., மூலல், பள்ளி தர மதிப்பீடு மற்றும் அங்கீகார வரைமுறைகள் உருவாக்கப்படும்.- ஒட்டுமொத்த கல்வி முறை குறித்து, தேசிய செயல்திறன் கணிப்புகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படும்.4.- மத்திய அரசு பள்ளிகளைத் தவிர, பொது மற்றும் தனியார் பள்ளிகளின் தரம் குறித்து மதிப்பீடுகள் செய்யப்பட்டு, தர அங்கீகாரம் அளிக்கப்படும்.- மாணவர்களுக்கு கல்வி பலன்களை அளிக்கும் வகையில், தனியார் மற்றும் நன்கொடைகள் மூலம் நடத்தப்படும் பள்ளிகள் துவக்க முன்னுரிமை மற்றும் வாய்ப்பு அளிக்கப்படும்ஆசிரியர்கள்ஆசிரியர் கல்வி4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்., - வரும் 2030க்குள், உள்ளூர் பள்ளிகள் உள்பட, அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு.2 ஆண்டு பி.எட்., - சிறப்பு பாடங்களை எடுக்கும், பட்டம் பெற்றுள்ளோருக்கு.1 ஆண்டு பி.எட்., - நான்கு ஆண்டு பல பாட திட்டத்தில் பட்டப் படிப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு.-- வரும், 2030க்குள், ஆசிரியர் கல்வி என்பது, பலபாட திட்டத்தின் கீழ் மாற்றப்படும்.- பலபாட திட்டத்தின் கீழ், கல்லூரிகள் மற்றும் பல்கலைகள், நான்கு ஆண்டு பி.எட்., படிப்பை வழங்கும். மேலும், தொலைதூரங்களில் உள்ள மாணவர்களுக்கு, திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி முறையிலும் இந்த பாட திட்டத்தை அளிக்கும்.----------------ஆசிரியர் கல்வி4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்., - வரும் 2030க்குள், உள்ளூர் பள்ளிகள் உள்பட, அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு.2 ஆண்டு பி.எட்., - சிறப்பு பாடங்களை எடுக்கும், பட்டம் பெற்றுள்ளோருக்கு.1 ஆண்டு பி.எட்., - நான்கு ஆண்டு பலபாட திட்டத்தில் பட்டப் படிப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு.- அனைத்து, பி.எட்., பாட திட்டங்களுக்கும், கற்பித்தலில் ஏற்கனவே சிறப்பாக உள்ள முறைகள், பல நிலை பயிற்சிகள் மற்றும் மதிப்பீடுகள், மாற்றுத் திறனுள்ள குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பது, சிறப்பு பாடத்தில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வியியல் தொழில்நுட்பத்தின் மூலம், கற்பதில் ஆர்வம் உண்டாக்கும் வகையில் அமையும்.-----------------------ஆசிரியர் கல்வி4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்., - வரும் 2030க்குள், உள்ளூர் பள்ளிகள் உள்பட, அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு.2 ஆண்டு பி.எட்., - சிறப்பு பாடங்களை எடுக்கும், பட்டம் பெற்றுள்ளோருக்கு.1 ஆண்டு பி.எட்., - நான்கு ஆண்டு பலபாட திட்டத்தில் பட்டப் படிப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு.- உள்ளூரில் உள்ள கலை, இசை, வேளாண்மை, தொழில்கள், கைவினைக் கலைகள், விளையாட்டு, தச்சு உள்ளிட்டவற்றில் திறமையானவர்களை பள்ளிகளில் கற்பிக்க பயன்படுத்தலாம்.

இதற்காக, பி.ஐ.டி.இ., அல்லது டி.ஐ.இ.டி., மூலம் குறுகிய கால ஆசிரியர் பயிற்சி வகுப்புகள் அவர்களுக்கு நடத்தப்படும்.ஆசிரியர் கல்வியை மேம்படுத்துதல்- அனைத்து ஆசிரியர் கல்வி பாட திட்டங்களுக்கும், பலபாட கல்வி நிறுவனங்களின் கீழ் நடத்தப்படும்.- வரும், 2021ம் ஆண்டுக்குள், ஆசிரியர் கல்விக்கான புதிய மற்றும் விரிவான தேசிய பாடதிட்ட வரைமுறை.- நல்ல கல்வியறிவு கொண்ட, பலபாட திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டங்கள் மட்டுமே வழங்கப்படும்.- பி.எட்., சேர்க்கைக்கு, தேசிய திறனறி ஆணைய தேர்வு நடத்தப்படும்.- நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த, பி.எட்., படிப்புக்கு, தகுதி அடிப்படையில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.- தரமில்லாத, ஆசிரியர் பயிற்சி மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.- ஆலோசனைகள் வழங்க, நல்ல திறன் உள்ள மூத்த மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அடங்கிய, தேசிய அளவிலான அமைப்பு உருவாக்கப்படும்.- ஆசிரியர் கல்வி உள்பட உயர் கல்வி துறைக்கு ஒரே கட்டுப்பாட்டு அமைப்பான, தேசிய உயர்கல்வி கட்டுப்பாட்டு கவுன்சில் அமைக்கப்படும்.- அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் தகுதித் தேர்வு வலுபடுத்தப்படும்.------------------ஆசிரியர் தேர்வு மற்றும் பணி அமர்த்தல்1. வெளிப்படையான டிரான்ஸ்பர் முறை - ஆசிரியர் டிரான்ஸ்பர் முறை வெளிப்படையாக இருக்க, ஆன்லைன் மூலமாக, கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.2. தகுதித் தேர்வு வலுபடுத்தப்படும் - பொது மற்றும் தனியார் பள்ளிகளில், அடித்தளம், தயார்படுத்துதல், நடுநிலை மற்றும் உயர்நில என அனைத்து நிலைகளுக்கான, ஆசிரியர் தகுதித் தேர்வு வலுப்படுத்தப்படும்.3. பணி நியமனத்தில் தேர்வு மதிப்பெண் மற்றும் நேரடி செயல்முறை விளக்கம் - பாடங்களுக்கான ஆசிரியர் நியமனத்தில், அவர்கள், டி.இ.டி., அல்லது என்.டி.ஏ., தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேரடி செயல்முறை விளக்கம் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.4. தொழில்நுட்ப உதவியுடன் ஆசிரியர் நியமன திட்டமிடல் - அடுத்த, 20 ஆண்டுகளுக்கு, பாட வாரியான ஆசிரியர்கள் தேவை எவ்வளவு என்பது, தொழில்நுட்ப உதவியுடன் திட்டமிடப்படும்.5. என்.சி.டி.இ., சீரமைப்பு - பொது கல்வி கவுன்சிலின் கீழ், தொழில்முறை தர நிர்ணய அமைப்பாக, என்.சி.டி.இ., எனப்படும் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சீரமைக்கப்படும்.6. சான்றிதழ் பாடதிட்டங்கள் - பாடங்களுக்கு ஏற்ப சிறப்பு ஆசிரியர்கள் அல்லது பொது ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாடங்கள் கற்றுத் தருவதற்கான, சான்றிதழ் பாடதிட்டங்கள் உருவாக்கப்படும்.

என்.சி.டி.இ., மற்றும் இந்திய மறுவாழ்வு கவுன்சில் இணைந்து இவற்றை வடிவமைக்கும்.-ஆசிரியர்களுக்கு அதிகாரமளித்தல்- அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர்களின் எதிர்கால தேவை குறித்து, தொழில்நுட்ப உதவியுடன், விரிவான, ஆசிரியர் நியமன திட்டம் உருவாக்கப்படும்.- பள்ளியில், அடித்தளம், தயார்படுத்துதல், நடுநிலை அல்லது உயர்நிலை என எந்த நிலையில் இருந்தாலும், ஆசிரியர்களுக்கு பணி ரீதியில் வளர்ச்சி கிடைக்கும்.- வரும், 2022ம் ஆண்டுக்குள், ஆசிரியர்களுக்காக, தேசிய தொழில்முறை தரம் உருவாக்கப்படும்.- பள்ளிகளில் சிறப்பான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, சேவை சூழல் மேம்படுத்தப்படும்.- வகுப்பறைகளில் மாணவர்களுக்கு எந்த முறையில் பாடங்களை கற்பிக்கலாம் என்பதை முடிவு செய்யும் தன்னாட்சி வழங்கப்படும்.- ஆசிரியர்களுக்கு, பாடதிட்ட தலைமைப்பண்பு முன்னேற்ற வாய்ப்புகள் அளிக்கப்படும்.- ஆசிரியர் தொழில்முறை மேம்பாடு* பணிகாலம் குறித்து, தகுதி அடிப்படையிலான கண்காணிப்பு முறை.* குறைந்தபட்சம், 50 மணி நேர, தொடர் தொழில்முறை வளர்ச்சி பயிற்சி.-------------------பள்ளி தலைமைப்பண்பு- ஆசியர்களுக்கு துவக்கநிலை தொழில்முறை தயாராவதற்கான பயிற்சி மற்றும் தொடர் தொழில்முறை வளர்ச்சி வாய்ப்புகள் அளிக்கப்படும்.- ஆசிரியர்களின் சுய விருப்பம் மற்றும் தொழில்முறை தேவையின் அடிப்படையில், 50 மணி நேர, தொடர் தொழில்முறை வளர்ச்சி பயிற்சி அளிக்கப்படும்.- தொடர் தொழில்முறை பயிற்சி முறையின் மூலம், ஆசிரியர்களுக்கு, நவீன பயிற்சி முறைகள் கற்றுத் தரப்படும்.- அடிப்படை கல்வி, எண்கள் குறித்தும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும், தனித்தன்மை மற்றும் போட்டிக்குத் தயாராகும் வகையிலும் உருவாக்கும் வகையிலும் கற்பிக்க, ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி வாய்ப்புகள் தரப்படும்.-முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள்சமூக - பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மீது கவனம்சமூக - பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு, கீழ்கண்ட பிரிவுகளின் கீழ் பிரிக்கப்படுகிறது:- பாலின அடையாளங்கள் (குறிப்பாக பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தோர்)- சமூக - கலாசார அடையாளங்கள் (எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்)- புவியியல் அடையாளங்கள் (குறிப்பாக, கிராமங்கள், சிறிய நகர்கள், ஆர்வமுள்ள மாவட்டங்கள்)- குறைபாடுகள் (கற்றலின் குறைபாடு உள்ளோரையும் சேர்த்து) மற்றும்- சமூக - பொருளாதார சூழ்நிலைகள் (புலம் பெயர்ந்த சமூகத்தினர், குறைந்த வருவாய் குடும்பத்தினர், பாதிக்கப்படும் அபாயம் உள்ள குழந்தைகள், ஆள்கடத்தலில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், நகர் பகுதிகளில் பிச்சை எடுத்தலில் ஈடுபடுவோர் உள்ளிட்ட ஆதரவற்றோர் மற்றும் நகர்பகுதி ஏழைகள்).இந்த ஒவ்வொரு பிரிவினருக்கும், பள்ளி கல்வியில் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், தனித்தனியாக சிறப்பு கவன வழிமுறைகள் உருவாக்கப்படும். சமஉரிமையை உறுதி செய்தல்தலையீடு - சமூக - பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோருக்கு, குழந்தை முன்பருவ கல்வி, அடிப்படை கல்வி மற்றும் எண்களை அறிதல், சேர்க்கை மற்றும் வருகை ஆகியவற்றில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வழி உருவாக்கப்படும்.சிறப்பு செயல்முறை - பழங்குடியினத்தைச் சேர்ந்த குழந்தைகள், தரமான கல்வியைப் பெறுவதற்கு, சிறப்பு செயல்முறை உருவாக்கப்படும். கற்றலின் வெளிப்பாடு - எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் சிறந்த கற்றலின் வெளிப்பாடு நிலையை அடைவதற்கு தனிகவனம் செலுத்தப்படும். எஸ்.இ.இசட்., - சமூக - பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோரில் பெரும்பாலானோர், எஸ்.இ.இசட் எனப்படும் சிறப்பு கல்வி மண்டலங்களின் கீழ் வருவர்.கட்டண விலக்கு - சமூக - பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோருக்கு, கல்விக் கட்டண விலக்குடன், கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும்.ஆலோசகர்கள் - பள்ளிகளுக்கு ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர்கூடுதல் பள்ளிகள் - சிறப்பு கல்வி மண்டலங்கள் மற்றும் தேவைப்படும் மாவட்டங்களில், கூடுதலாக, ஜவஹர் நவோதயா பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நிறுவப்படும்.-பாலினம்பாதுகாப்பு மற்றும் உரிமைகள் - படிப்பை தொடரும் வகையில், அனைத்து மாணவர்கள், குறிப்பாக மாணவியரின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும்.கே.ஜி.பி.வி., - கே.ஜி.பி.வி., எனப்படும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள், 12ம் வகுப்பு வரை உயர்த்தப்பட்டு, வலுபடுத்தப்படும்.பாலியல் உட்படுத்தல் நிதி - பெண் மற்றும் மூன்று பாலின மாணவர்களுக்காக பாலியல் உட்படுத்தல் நிதி உருவாக்கப்படும்.

பாலியல் உணர்வுதிறன் - பாலியல் உணர்வுதிறன் என்பது, பாட திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.பாலின இடைவெளி குறைத்தல் - பாலின இடைவெளியைக் குறைத்து, அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் அளிக்கப்படும்.பெண்களுக்கான கொள்கைகள் - சமூகம், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோரில், பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், திட்டங்கள் மற்றும் கொள்கைகள் உருவாக்கப்படும்.சிறப்பு தேவை குழந்தைகளுக்கு ஆதரவு1. இயங்கச் செய்யும் வழிமுறைகள் - சிறப்பு தேவை தேவைப்படும் குழந்தைகள் அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகள், தரமான கல்வியைப் பெறுவதற்கு வசதியாக, அவர்கள இயக்குவதற்கு தேவையான வசதிகள், வழிமுறைகள் வகுக்கப்படும்.2. வழக்கமான பள்ளி வகுப்புகள் - சிறப்பு தேவை உள்ள குழந்தைகள், வழக்கமான பள்ளிகளில், துவக்கப் பள்ளியில் இருந்து உயர்நிலை வரை அனைத்து நிலைகளிலும் சேர்க்கப்படுவர்.3. உதவும் சாதனங்கள் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை - உதவி தேவைப்படும் குழந்தைகள் இயங்குவதற்கு, தொழில்நுட்ப உதவியுடன் கூடிய சாதனங்கள் நிறுவப்படும்.

இது குறித்து பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்படும்.4. மாதிரிகள் - சைகை மொழி மூலமாக பாடங்கள் கற்பிக்கும் உயர் தர மாதிரிகள் உருவாக்கப்படும்.5. மாற்று பள்ளிகள் - மாற்று கற்பித்தல் வழியில் செயல்பட வேண்டியுள்ளதால், மாற்று பள்ளிகள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்.6. சான்றிதழ் படிப்புகள் - சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.--தொழிற்கல்வியை அனைத்து நிலையிலும் ஒருங்கிணைத்தல்- பயிற்சி அடைப்படையிலான பாடதிட்டம் - 6 முதல் 8ம் வகுப்பு வரையில், பயிற்சியுடன் கூடிய பாடதிட்டம் வடிவமைக்கப்படும்.- திறன் இடைவெளி பகுப்பாய்வு - மாணவர்களுடைய திறன் இடைவெளி பகுப்பாய்வு மற்றும் உள்ளூர் வாய்ப்புகளை இணைப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.- திறந்தநிலை தொலைதூர கல்வி முறை - திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி முறையின்படி படிப்புகள் வழங்கப்படும்.- தொழிற்கல்வியை எதிர்கொள்ளுதல் - வரும், 2025ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம், 50 சதவீத மாணவர்கள், தொழிற்கல்வியை எதிர்கொள்வர்.- லோக்வித்யா - லோக்வித்யா எனப்படும் அறிவு மேம்பாட்டு திட்டம், அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்.- திறன் வரைமுறை - தொழில் மற்றும் தொழில்முறை கல்வியின் ஒவ்வொரு பிரிவுக்கும் தேசிய திறன் தகுதி வரைமுறை வரையறுக்கப்படும்.- கைவினை தொழில் - உள்ளூரில் உள்ள தச்சு, பூங்கா பராமரிப்பு, மண்பாண்டம் தயாரித்தல், கலை உள்ளிட்ட கைவினை தொழில் பயிற்சிகள், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும்.பராக் அமைத்தல்பராக் - பராக் எனப்படும், திறன் மதிப்பீடு, மறுஆய்வு மற்றும் அறிவு பகுப்பாய்வு மூலம், ஒட்டுமொத்த வளர்ச்சியை மாணவர்கள் பெறுவதற்காக, தேசிய மையம் அமைக்கப்படும்.

மதிப்பீடு - தகுதி அடிப்படையிலான மதிப்பீடுகளுக்கு மாறுவது21ம் நூற்றாண்டு திறன்கள் - 21ம் நூற்றாண்டுக்கு தேவையான புதுமையான சிந்தனைகளை வகுப்பறைகளில் உருவாக்குவது.பராக்கின் நோக்கங்கள்- மதிப்பீடு மற்றும் திறன் சோதனைக்கான தரம், வழிமுறை மற்றும் விதிமுறைகளை உருவாக்குவது.- தேசிய செயல்திறன் ஆய்வுக்கு வழிகாட்டுதல்.- தேசிய செயல்திறன் ஆய்வை நடத்துவது.- நாட்டில் கற்றலின் வெளிப்பாடு செயல்பாட்டை கண்காணித்தல்.அதிக திறமை உள்ள, சிறப்பு திறனுள்ள மாணவருக்கு ஆதரவுதிறமைசாலி, சிறப்பு திறனுள்ள மாணவரை ஊக்குவித்தல் - வழக்கமான பள்ளி பாடதிட்டத்துடன், அவர்களுடைய திறமைகள் ஊக்கவிக்கப்படும்.- திட்டங்களை செயல்படுத்தும், கிளப்புகள் அமைக்கப்பட்டு, அனைத்து நிலையிலும் ஆதரவு தரப்படும்.ஒலிம்பியாட் மற்றும் போட்டிகள் - பல்வேறு பாடப் பிரிவுகளில், நாடு முழுதும், ஒலிம்பியாட் மற்றும் போட்டிகள் நடத்தப்படும்.- தனி திறனுள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில், பி.எட்., பாட திட்டத்திலும் மாற்றம் செய்யப்படும்.- பல்வேறு தரப்பினரும் பங்கேற்கும் வகையில், ஊரக பகுதிகள் மற்றும் பிராந்திய மொழிகளுக்கு ஏற்ப தகுந்த மாற்றங்கள் செய்யப்படும்.- அதிக திறமை உள்ள, சிறப்பு திறனுள்ள மாணவர்களை ஊக்குவிக்க, தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படும்.- திறனுடைய குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் பாடதிட்டங்களில் மாற்றம் செய்வதற்கு, என்.சி.இ.ஆர்.டி., மற்றும் என்.சி.டி.இ., வழிமுறைகளை வகுக்கும்.-ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் கல்விதீட்சா - ஒரு நாடு - ஒரு டிஜிட்டல் தளம் - இலவச ஆன்லைன் கல்வி - ஸ்வயம்.உட்படுத்துதல் மற்றும் அணுகுதல் - உடல் ஊனமுள்ள மாணவர்கள் உள்பட வாய்ப்பு கிடைக்கப் பெறாதவர்களுக்கும், கல்வி முறையில் உட்படுத்துதல் மற்றும் அணுகும் வசதி ஏற்படுத்துதல். இணைப்பு கல்வி - பலவகை பாடங்கள் இணைக்கப்பட்ட கல்வியை கற்கும் வகையிலான திறமையான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.உட்பொருட்கள் உருவாக்கம் - உட்பொருட்கள் உருவாக்கம், டிஜிட்டல் சேகரிப்பு மற்றும் பரவலாக்குதல். கற்பித்தல், கற்றல் மற்றும் மதிப்பீடுகளில், தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல்.டிஜிட்டல் தளங்கள் - டிஜிட்டல் தளங்கள் மற்றும் தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப முறையிலான கல்வி முயற்சிகள் மேம்படுத்தப்பட்டு, விரிவுபடுத்தப்படும்.முன்னோடி ஆய்வுகள் - தொடர்ச்சியான முன்னோடி ஆய்வுகள் நடத்தப்படும்.தளங்கள் விரிவுபடுத்தல் - ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள, மின்னணு கற்றல் தளங்களான, தீட்சா, ஸ்வயம் உள்ளிட்டவை விரிவுபடுத்தப்படும்.முதியோர் கல்வி மற்றும் வாழ்நாள் கற்றல்புதுமையான முயற்சிகள் - சமூக பங்களிப்பு மற்றும் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புடன், முதியோர் கல்வியில் புதுமையான முயற்சிகள்.உயர்கல்வியுடன் ஒருங்கிணைப்பு - உயர் கல்வி மையங்கள் மற்றும் இதர பொது கல்வி நிறுவனங்களுடன், முதியோர் கல்வி மையங்கள் ஒருங்கிணைப்பு.தொழில்நுட்ப ரீதியிலான வாய்ப்புகள் - முதியோர் கல்வியில், தொழில்நுட்ப ரீதியிலான, உயர் தர வாய்ப்புகள் உருவாக்கப்படும். உதாரணத்துக்கு, செயலிகள், ஆன்லைன் வகுப்புகள், சாட்டிலைட் மூலமான டிவி சானல்கள் போன்றவை.ஆன்லைன் புத்தகங்கள் - ஆன்லைன் புத்தகங்கள், தகவல் தொழிலநுட்ப ரீதியிலான நூலகங்கள், முதியோர் கல்வி மையங்கள் ஆகியவை, அரசு மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் உருவாக்கப்படும்.முதியோர் கல்வி பாடதிட்டங்கள், ஐந்து முறைகளில் செயல்படுத்தப்படும் :- அடிப்படை கல்வி மற்றும் எண்களை அறிதல்- நுட்பமான வாழ்க்கை திறன்கள்- தொழில் திறன் மேம்பாடு- ஆரம்ப நிலை கல்வி- தொடர் கல்விசெயல்படுத்துவதற்கான இலக்குகள் மற்றும் காலக்கெடுமுன் குழந்தை பருவக் கல்வி1ம் வகுப்பு மாணவர்களுக்கான, ஒரு ஆண்டு முன் துவக்கக் கல்வி மற்றும் மூன்று மாத தயார்படுத்துதல் திட்டம் செயல்படுத்துவது துவக்கம் (கட்டம் 1)ஒரு ஆண்டு, முன் துவக்கக் கல்வி முறையை, துவக்கப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மூலம் விரிவுபடுத்தல் (கட்டம் 2)2021 - 222022 - 232023 - 242024 - 252025 - 26புதிய பாடதிட்டம் மற்றும் மதிப்பீடுகள் அமல்9ம் வகுப்பு10ம் வகுப்பு11ம் வகுப்பு12ம் வகுப்பு12ம் வகுப்புக்கான புதிய வாரியத் தேர்வு முறைகள் 10ம் வகுப்புக்கான புதிய வாரியத் தேர்வு முறைகள்புதிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்துவதற்கான காலக்கெடுபள்ளிக் கல்விக்கான தேசிய பாடதிட்டம் வரையறையை உருவாக்குதல்.அனைத்து துவக்கப் பள்ளிகளிலும், மூன்றாம் வகுப்பு வரை, அடிப்படை கல்வி மற்றும் எண்களை அறிதல் நிலையை எட்டுதல்.தரமான முன் குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் வளர்ச்சியை முழுமையாக எட்டுதல்.கொள்கை அதன் செயல்பாட்டு நிலையை எட்டுதல்.

இந்த நிலையில், மறுஆய்வு செய்யப்படும்.2020 - 21 2022 - 23 2023 - 242 024 - 25 2025 - 26 2026 - 27 2027 - 28 2028 - 29 2029 - 30 2040ஆசிரியர் கல்விக்கான தேசிய பாடதிட்டத்துக்கான வரையறையை உருவாக்குதல் ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தரத்துக்கான பொதுவான வழிகாட்டுதல் வகுத்தல்மதிப்பீட்டு முறைகளுக்கு மாறுவதற்கு ஆசிரியர்கள் தயாராதல்பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை முழுமையாக சாதகமாக பயன்படுத்துவதை, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்தல்பள்ளிகள் மற்றும் உயர் கல்வி முறைகளில், குறைந்தபட்சம், 50 சதவீத மாணவர்களுக்கு, தொழிற்கல்வி அளித்தல்ஆசிரியர் கல்வி படிப்பானது, படிப்படியாக, பலபாடங்களை அளிக்கும் கல்லூரிகள், பல்கலைக்கு மாற்றுதல். குறைந்தபட்சம் பட்டப்பட்டிப்பு தகுதியுடன், நான்கு ஆண்டு, பி.எட்., படிப்புகள்கல்வியில் சிறந்த, பலபாடங்களை கற்றுத்தரும், ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி திட்டங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும். அனைத்து, ஆசிரியர் பயிற்சி மையங்களும், பலபாடங்களை கற்றுத் தரும் கல்வி மையமாக மாற்றப்படும்.-கொள்கையில் புதிய அம்சங்கள்---------------
புதிய அம்சங்கள் (1/3)1. பள்ளிக் கல்வி மற்றும் துவக்கப்பள்ளி நிலைகளில் தயாராதல்- வரும், 2030க்குள், அனைவருக்கும் முன் குழந்தைப் பருவக் கல்வி: தேசிய பாடதிட்ட வரைமுறை உருவாக்குதல்- வரும், 2030க்குள், பள்ளிக் கல்வியில், 100 சதவீத மாணவர் சேர்க்கை விகிதம்- அங்கன்வாடி மற்றும் பிரீ ஸ்கூல்களில், 5 - 6 வயது குழந்தைகளுக்கு, தயார்படுத்தல் வகுப்புகள், பாலவாடிகா- 1ம் வகுப்பில் சேருவோருக்கு, பள்ளி தயார்படுத்தல் திட்டம்- தேசிய அடிப்படை கல்வி மற்றும் எண் அறிதல் இயக்கம்- பால பவன்கள் அமைப்பு2. பள்ளி கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆதாரங்கள்- சிறப்பு கல்வி மண்டலங்கள்- பள்ளிகளில் பயன்படுத்தாத இடங்களை, சமாஜிக் சேத்னா கேந்திராவாக பயன்படுத்தல்- பகிர்ந்து கொள்ளும் வகையில், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்தல்3, மாணவரின் ஒட்டுமொத்த வளர்ச்சி- பாடதிட்டம், கூடுதல் பாடங்கள், இணை பாடங்கள், கலை மற்றும் அறிவியல், விளையாட்டு, தொழில், கைவினை என தனித்தனியாக பிரிக்கப்படாது.

நாட்டின் கலாசாரம் மற்றும் கொள்கைகளை வெளிப்படுத்தும் வகையில், பாடதிடங்கள் ஒருங்கிணைப்பு- பரிசோதனை அடிப்படையிலான கற்பித்தல், கற்றல் முறைகள் உள்பட, புதுமையான கற்பித்தல் திட்டங்கள்- புத்தகங்கள் படிப்பதை ஊக்குவிக்கும் கொள்கைகள், டிஜிட்டல் நூலகங்கள்- ஒரு குழந்தையின் முழுமையான திறன்களை அடையாளம் காணும் வகையில், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய, தேர்ச்சி அட்டைகள்- துவக்கப் பள்ளிகளில், தொழிற்கல்வி இணைத்தல், 10 நாட்களுக்கு பைகள் இல்லா தினம்- உள்ளூர் தொழில் மற்றும் கைவினைகள், 6 - 8 வகுப்பு மாணவர்களுக்கு கற்றுத் தருதல்- லோக் வித்யா - உள்ளூர் கலைஞர்கள் மூலம் கற்றுத் தருதல்புதிய அம்சங்கள் (2/3)4. உள்ளடக்கல்- பாலின உள்ளடக்கல் நிதி; 12ம் வகுப்பு வரை கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள்- திறனுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வசதிகள்- முதியோர் கல்வியில் தொழில்நுட்பம் அடிப்படையிலான தீர்வுகளுக்கு தனிகவனம். முதியோர் கல்விக்கு தேசிய பாடதிட்ட வரைமுறை வகுத்தல்- தேசிய திறந்த நிலை பள்ளிகள் விரிவுபடுத்தப்படும். தொழிற்கல்வி மற்றும் 3, 5, 8ம் வகுப்புகளுக்கான பாடங்களை இவை உருவாக்கும்.- குறைந்த பட்சம், 5ம் வகுப்பு வரை, தாய் மொழி வழியில் கற்பிக்கப்படும்.5. மதிப்பீடுகள்- பராக் எனப்படும், திறன் மதிப்பீடு, மறுஆய்வு மற்றும் அறிவு பகுப்பாய்வு மூலம், ஒட்டுமொத்த வளர்ச்சியை மாணவர்கள் பெறுவதற்காக, தேசிய மதிப்பீட்டு மையம் அமைக்கப்படும்- 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வைத் தவிர, 3, 5, 8ம் வகுப்புகளில் தேர்வு நடத்தப்படும்.- வாரியத் தேர்வுகள் என்பது, பாடங்களை புரிந்து கொள்ளும் அறிவு, அவற்றை பயன்படுத்துதல் அடிப்படையில், மிகவும் இலகுவாக இருக்கும்6. பாடதிட்டம் மற்றும் கற்பித்தல் வரைமுறை- 5 + 3 + 3 + 4 என்ற புதிய கல்வி திட்டம் மற்றும் கற்பித்தல் வரைமுறை அறிமுகம்- நுட்பமான முக்கியமானவற்றை கற்கும் வகையில், பாட திட்டம் குறைக்கப்படும்- தேசிய பாடதிட்ட வரைமுறையின் கீழ், ஒவ்வொரு வகுப்புகளிலும், திறன்கள் அடையாளம் காணப்படும்- தேசிய பாடதிட்ட வரைமுறையின் கீழ், பள்ளிகளுக்கான மாற்று வாய்ப்புகள் உருவாக்குதல்- பாடங்கள் கற்பித்தல் மற்றும் கற்றலில், தகவல் தொழிநுட்பத்தை ஒருங்கிணைந்த வழிமுறைகள்- மாணவர்கள் செயல்பாடுகள், அவர்களுடைய கற்கும் திறன் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

பொதுவான உயர்நிலைப் பள்ளி கல்வி------------------------புதிய அம்சங்கள் (3/3)7. ஆசிரியர் நியமனம்/ ஆசிரியர் கல்வி- வரும், 2030ம் ஆண்டுக்குள், ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச கல்வியாக, நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த, பி.எட்., நிர்ணயம்- ஆசிரியர் பயிற்சி தேர்வு, தேசிய தேர்வு மையத்தின் பயிற்சி மற்றும் செயல் விளக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, ஆசிரியர் நியமனம் இருக்கும். ஆசிரியர் பயிற்சி தேர்வு கட்டாயமாக்கப்படும்- ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஆண்டுக்கு, குறைந்தபட்சம், 50 மணி நேரம் பணி சார் பயிற்சி வழங்கப்படும்- வரும், 2022க்குள் ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தகுதி நிர்ணயம்- தகவல் தொழில்நுட்பம் மற்றும் புள்ளி விபரங்களின் அடிப்படையில், ஆசிரியர் பயிற்சி மையங்களுக்கான தரம் நிர்ணயிக்கப்படும். வரும், 2030க்குள் ஆசிரியர் பயற்சி வகுப்புகள், பல பாட கல்வி அளிக்கும் கல்லூரி, பல்கலைகளுடன் ஒருங்கிணைக்கப்படும்- சரியாக செயல்படாத, ஆசிரியர் பயிற்சி மையங்கள் மீது கடும் நடவடிக்கை- பி.எச்டி., மாணவர்களுக்கு, கற்பித்தல் தொடர்பான ஒரு மாதிரியை உருவாக்குவது கட்டாயமாக்கப்படும்8. அரசு துறைகள், அமைப்புகள், மையங்களின் பங்கு- மாநில துறைகள், கொள்கை முடிவுகளை உருவாக்கும்.

கல்வி இயக்குநரகம், செயல்பாடுகளை கவனிக்கும். எஸ்.சி.இ.ஆர்.டி., பாடதிட்டங்களை கவனிக்கும். மாநில கல்வி தர ஆணையம், தனியார் மற்றும் பொது பள்ளிகள் சுயமாக தெரிவிக்கும் வகையிலான, தரத்தை நிர்ணயிக்கும்- பள்ளிகள் சுயமாக அளிக்கும் விபரங்கள் குறித்து, மாணவர்களிடம் மாதிரி சோதனை நடத்தப்படும்- சமூக ஆர்வலர்கள், முன்னாள் மாணவர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தன்னார்வலர்களின் சேவை பயன்படுத்தப்படும்- மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் மற்றும் மாநில அமைப்புகள் மூலம், ஆசிரியர் பயிற்சி பாடதிட்டங்கள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யப்படும். இதற்காக, கல்விக்கான தேசிய ஆலோசனை வாரியம் வலுப்படுத்தப்படும்- கற்றல் மற்றும் கற்பித்தலில் அதிக கவனம் செலுத்தும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை, கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட வேண்டும்.-

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H