புதுடில்லி: செப்.,21 முதல் 9ம் வகுப்பு முதல் 12 ம்வகுப்பு மாணவர்கள்,
சுய விருப்பத்தின்படி பள்ளிக்கு வரலாம் என அரசு தெரிவித்து உள்ளதுகொரோனா
வைரஸ் பரவலை தடுப்பதற்காக, நாடு முழுதும், மார்ச் இறுதியிலிருந்து, பொது
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு உள்ளன.
இதற்குப் பின், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளி,
கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. கல்வி நிறுவனங்கள் காலவரையன்றி
மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற கருத்தும்,
கல்வியாளர்களால் முன் வைக்கப்படுகிறது.தற்போது, ஆன்லைன் வாயிலாக
வகுப்புகள் நடத்தப்பட்டாலும், அது, பள்ளிக்கு மாணவர்கள் நேரடியாகச் சென்று
படிப்பதற்கு ஈடாகாது என்றும், ஏழை மாணவர்கள் இந்த நடைமுறையால் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து,
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு
துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.இந்நிலையில்,
செப்.,21 முதல் 9-12 ம்வகுப்பு மாணவர்கள் சுய விருப்பத்தின்படி பள்ளிக்கு
வரலாம் என அரசு தெரிவித்து உள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டு
உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: 9-ம் வகுப்புமுதல் 12-ம்
வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம்.
அவ்வாறு வரும் மாணவர்கள் பெற்றோர் ஒப்புதல் பெற்ற பிறகே பள்ளிக்கு வந்து
ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம். பள்ளியில் 6 அடி தனிமனித இடைவெளியை
மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்.
அடிக்கடி கைகளை கழுவவேண்டும். முக
கவசம் அணிய வேண்டும். பிரார்த்தனை கூட்டம் விளையாட்டு, ஒன்று கூடுதல்
போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது. கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இருந்து
மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை. மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் போக்க ஆலோசனைகளை வழங்க வேண்டும். என மத்திய
அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.