திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
மாணவிகள் சேர்க்கை குறித்து ஆசிரியர்கள் கிராமங்கள் தோறும் சென்று
விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.திருக்கோவிலுார் பெண்கள் மேல்நிலைப்
பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில்
கொரோனா ஊரடங்கு உத்தரவால் மாணவிகளின் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளது. இதனை
சரி செய்யும் வகையில் தலைமை ஆசிரியர் யமுனாபாய் தலைமையில், உதவி தலைமை
ஆசிரியர்கள் காமராஜ், பாஸ்கரன் மேற்பார்வையில், நான்கு குழுக்களாக
அமைக்கப்பட்டுள்ள
ஆசிரியர்கள், குடமுருட்டி, கோட்டமருதுார், கொல்லுார்,
தேவியகரம் என சுற்று வட்டார கிராமங்களுக்கு நேரில் சென்று மாணவிகள்
சேர்க்கை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பெற்றோர்களிடம் வழங்கி
மாணவிகள் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.மாணவிகள் இடை நிறுத்தலை
தவிர்க்க பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை
பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.