அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மனித சங்கிலி போராட்டம் நடத்தப் போவதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து தற்போது உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று மாற்றவும், பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க உருவாக்கப்படும் புதிய பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பெயர் மாற்றும் முடிவை கைவிடும் வரை, பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் பேராசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...