சேலம்,+2 தனித்தேர்வு மதிப்பீட்டு மையமான சூரமங்கலம், புனித சூசையப்பர் பள்ளியில் கடந்த 15 நாட்களாக முகாம் அலுவலர் சேலம் ஊரக மாவட்டக்கல்வி அலுவலர் திரு.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.இதில் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் படி சேலம் செஞ்சிலுவைச் சங்கத்தின் கன்வீனர் திரு.பிரபாகர் தலைமையில் ஆசிரியர்கள் மதிப்பீட்டிற்கு வரும் ஆசிரியர்களுக்கு சானிடைசர் வழங்குதல்,முகக்கவசம் அணிவதை உறுதி செய்தல்,சமூக இடைவெளியை பின்பற்றசெய்தல் மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல் போன்ற கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகளைப் பாராட்டி சேலம் ஊரக மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் அவர்களும், சிறப்பு விருந்தினராக சேலம் மண்டல மதுவிலக்கு அமல் பிரிவு கண்காணிப்பாளர் முனைவர். ரா. சிவக்குமார் ஐ.பி.எஸ் அவர்களும் கலந்துகொண்டு கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்ட செஞ்சிலுவை சங்க ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் பாரத சாரண,சாரணியர் இயக்கத்தினருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சேலம் இளம் செஞ்சிலுவை சங்கம் விடைத்தாள் திருத்தும் மையத்தில் கொரோனா தடுப்புச்சேவை