இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு
ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேர் இந்த வருடம் இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறுகிறார்கள்.
உலகின்
மிக உயரிய விருதுகளுள் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல்
அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 211 தனிநபர்கள்
மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் போட்டி பட்டியலில் உள்ளனர்.
இந்நிலையில்
2020-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட்
ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டுள்ளது. கருந்துளை பற்றிய ஆய்வுக்காக 3 பேருக்கும் இந்த
கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.