
கூடலுார்; மொபைல் போன் சிக்னல் கிடைக்காததால், கல்லுாரி மாணவர்கள்,
மூங்கில் காட்டு பகுதியில் அமர்ந்து, 'ஆன்லைன்' வகுப்புகளில் பங்கேற்று
வருகின்றனர்
கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள், கல்லுாரி மாணவர்கள்,
ஆன்லைன் வகுப்புகள்மூலம், கல்வி கற்று வருகின்றனர்.பல கிராம பகுதிகளில்,
மொபைல் போன் சிக்னல் கிடைக்காமல், ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க,
மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலுார்
தொரப்பள்ளி, அல்லுார் பகுதியில், மொபைல் போன் சிக்னல் கிடைப்பதில்லை.
இதனால்,
70க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், 1 கி.மீ., தொலைவில் உள்ள, கோடமூலா
பகுதியில், சாலையோர மூங்கில் காட்டில் அமர்ந்து, ஆன்லைன் வகுப்புகளில்
பங்கேற்று வருகின்றனர். இதனால், பல்வேறு சிரமங்களை சந்தித்து
வருகின்றனர்.மாணவர்கள் கூறுகையில், 'அல்லுார் வயல் பகுதியில்,
பி.எஸ்.என்.எல்., சிக்னல் முழுமையாக கிடைக்காததால், வீட்டிலிருந்து ஆன்லைன்
வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்'
என்றனர்.








