ஏற்கனவே படித்த குட்டிக் கதை தான்---- அன்பு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஏற்கனவே படித்த குட்டிக் கதை தான்---- அன்பு:


 ஏற்கனவே படித்த குட்டிக் கதை தான்----    அன்பு

ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார்.

உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு, இல்லையேப்பா, நல்லா தானே இருக்கு என்பார், உடனே அந்த இளைஞர் கோபித்துக் கொள்வது போல் உரித்தப்பழம் எனக்குத் தேவையில்லை... நீங்களே சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம், ஏங்க..., பழங்கள் நல்லா இனிப்பாக தானே உள்ளது, என் தினமும் இப்படி நல்லா இல்லைனு சொல்லி டிராமா போடறீங்க என்று கேட்டார்.

உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம், அந்த
பாட்டி நல்ல இனிப்பான பழங்களைத் தான் விற்கிறார்,.. ஆனாலும்
தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட மாட்டார். நான் இப்படி
குறை கூறி கொடுப்பதால் தான் தினம் அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுகிறார் என்றார்.

தினமும் நடக்கும் இந்த நாடகத்தை அருகில் இருந்த காய்கறி வியாபாரி கவனித்து விட்டு, அந்த பாட்டியிடம், அந்த ஆள் தினமும் உன் பழங்களை குறை கூறுகிறான், இருந்தும் நீ ஏன் அவனுக்கு எடை அதிகமாக போட்டு பழங்களை கொடுக்கிறாய் எனக் கேட்டான்..

உடனே அந்த பாட்டி புன்னகைத்து விட்டு, அவன் என்னை தினமும் ஒரு பழத்தை சாப்பிட வைப்பதற்காக இப்படி குறை கூறுவது போல கூறி கொடுத்து சாப்பிட வைக்கிறான், இது எனக்கு தெரியாது என்று நினைக்கிறான், நான் எடை அதிகமாக பழங்களை போடுவது இல்லை. மாறாக அவனது அன்பில் எனது தராசு கொஞ்சம் சரிந்து விடுகிறது , அவ்வளவுதான் என்றார் அன்போடு.

சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு....

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இன்றைய சிந்தனைக்கு

அதிகாரம் : 8 - அன்புடைமை

குறள்:73

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு

கலைஞர் உரை:

உயிரும் உடலும் இணைந்து இருப்பது போல், அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

மு.வ. உரை :

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை :

பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.

Translation:

Of precious soul with body's flesh and bone,\r\nThe union yields one fruit, the life of love alone.

Explanation:

They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth). \r\n\r\n.

இனிய காலை வணக்கம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H