பள்ளி மாணவர்கள் பற்றிய விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்து, முறையாக பராமரிக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் விவரம் ‘எமிஸ்’ வலைதளம் வழியாகவே கையாளப்பட்டு வருகின்றன. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், மாணவர் விவரங்களை ‘எமிஸ்’தளத்தில் முறையாக பதிவேற்றம் செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘பள்ளியில் இடைநின்றவர்கள், இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ்பெற்று விலகிய மாணவர்களின் விவரங்கள் ‘எமிஸ்’ தளத்தில் இருந்து உடனுக்குடன் நீக்கப்படவேண்டும். பெரும்பாலான பள்ளிகள் அவ்வாறு செய்யாததால் கடந்த ஆண்டு பல்வேறுகுழப்பங்கள் ஏற்பட்டன. அதைதவிர்க்க, ‘எமிஸ்’ தளத்தில் மாணவர் விவரங்களை முறையாகபராமரிக்க அறிவுறுத்தியுள் ளோம்.
‘எமிஸ்’ தள செயல்பாடுகளை மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.