பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம்
ஒரு நாள் மரத்தடி, ஒரு நாள் கோயில் , ஒரு நாள் தார்சாலை, என ஒவ்வொறு நாளின் சந்திப்பும் அவர்களாளேயே தீர்மானிக்கப்படுகிறது.. சுவர்களுக்குள்ளிருக்கும் கட்டுபாடுகள் இல்லாத இந்த வீதி வகுப்புகள் அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் புதிய புதிய அனுபவங்களை தருகிறது.. தொடக்கத்தில் தயக்கமும் அச்சமும் இருந்தாலும் ஒவ்வொரு சந்திப்பும் தரும் அனுபவங்கள் அடுத்த அடுத்த செயல்பாடுகளின் திட்டமிடலுக்கு உத்வேகத்தை தந்து வருகிறது. என்னை இயங்கவைக்கும் இயக்குசக்தி இவர்கள்.
Subashini Jaganathan
விழுப்புரம்