
ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு தமிழக அரசு பட்டா வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பட்டா மேளாவை டிசம்பரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெடாங்கி வைக்கிறார். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு சலுகைகள் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்படுகின்றன. அரசு ஊழியர்களுக்கு வாரம் ஐந்து நாட்கள் மட்டுமே பணி, பட்டா வழங்குவது உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன.
பட்டா வழங்குவது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் வசிப்போர்கள் அங்கிருந்து வெளியேற்றும் நடைமுறை இருந்து வந்த நிலையில், தற்போது ஆட்சேபனை இல்லாத புறம்போக்கும் நிலங்கள், ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்கள் என வரன்முறைப்படுத்த முடிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனயைடுத்து வருவாய்த்துறை கள அலுவலர்கள் மாநராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் கிராம பஞ்சாயத்துக்குளில் ஆட்பேசனை இல்லாத புறம்போக்கு மற்றும் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்கள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
அதில் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்கள் அனைத்தும் வரன்முறை செய்யப்படுகிறது. இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கும் நடைமுறைகளை நவம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். டிசம்பரில் பட்டா வழங்கும் மேளாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
newstm.in








