வருகிற 16-ந் தேதி பள்ளி, கல்லூரிகள், விடுதிகளை திறப்பது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கொரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பின்பு திறக்கலாம். அண்டை மாநிலங்களில் என்ன நிலை உள்ளது? என்பதையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவு செய்வது அவசியம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது தமிழக அரசு வக்கீல் ஆஜராகி, “பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோரின் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பெற்றோர் பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்க வேண்டாம் என்று தெரிவித்து வருகின்றனர்” என தெரிவித்தார்.
இந்த நிலையில் அரசு தனது உத்தரவை ரத்து செய்து அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை ரத்து செய்தது தமிழக அரசு :
பள்ளிகள் திறப்பு குறித்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு பின்னர் முடிவு செய்யப்படும்
நவ 16 ல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து
பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்-தமிழக அரசு
9,10,11,12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்கிற அறிவிப்பு ரத்து









