ஒவ்வொரு மாநிலமும் கல்வி நிறுவனங்களை திறக்கும் முடிவை எடுக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் குறைந்ததையடுத்து, கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. குஜராத் மாநிலத்தில் நவம்பர் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து அதற்கான உத்தரவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்தது. இந்நிலையில், கொரோனா பரவல் மேலும் அதிகரித்ததை பரிசீலனை செய்த அரசு, வரும் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என நேற்று அறிவித்தது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான முந்தைய உத்தரவை ரத்து செய்தது.