என்பவர் ஆங்கிலேயர் காலத்து ICS அதிகாரி. பிறகு 1960களில் நேரு
ஆட்சிகாலத்தில் டெல்லியில் உயர் அதிகாரியாக இருந்தவர். தனது
கடைசிகாலத்தில் சென்னை பெசன்ட் நகரில் வாழ்ந்து மறைந்தவர்.
கோபாலனுடைய மகள் ஷியாமளா, 1958ஆம் ஆண்டு தன்னுடைய
19 வயதில் மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்கிறார்.
அங்கு கல்லூரியில் அவருக்கு அறிமுகமான ஜமாய்க்கா நாட்டை
சேர்ந்த டொனால்ட் ஹாரிஸ் என்பவரை திருமணம் செய்துகொள்கிறார்.
ஷியாமளாவிற்கும் டொனால்ட் ஹாரிஸுக்கும் இரண்டு பெண்
குழந்தைகள் பிறக்கின்றன - கமலா ஹாரிஸ் & மாயா ஹாரிஸ்
1971 ஆம் ஆண்டு டொனால்டிடம் இருந்து விவாகரத்து
பெற்றுக்கொள்கிறார் ஷியாமளா. பிறகு இரண்டு
குழந்தைகளையும் Single Mother ஆக அமெரிக்காவில் வளர்க்கிறார்.
கமலாவின் சகோதரி, மாயா ஹாரிஸ் தன்னுடைய 17 வயதில்,
பள்ளி மாணவியாக இருந்தபோது ஒரு பெண் குழந்தையை
பெற்றெடுக்கிறார். அவருக்கு மீனாக்ஷி (மீனா ஹாரிஸ்) என்று
பெயர் சூட்டி வளர்க்கிறார்கள். மீனாவின் Biological father யார்
என்பது குறித்த தகவல்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
அமெரிக்காவில் இது ஒரு பெரிய விசயமல்ல. ஷியாமளா, கமலா,
மாயா மூவரும் சேர்ந்து அந்த குழந்தை எந்த குறையும் இல்லாமல்
வளர்த்திருக்கிறார்கள்.
அதன் பல காலத்திற்கு பிறகு, மாயா தன்னுடைய கல்லூரி காலத்து
நண்பரான டோனி என்கிற கருப்பினத்தவரை கல்யாணம் செய்து
கொள்கிறார். மாயா சட்டம் பயின்று அவரும் ஒரு பிரபலமானவராகதான்
இப்போது இருக்கிறார்.
மாயாவின் மகள் மீனா (மீனாக்ஷி) சட்டம் பயின்று தற்போது
வழக்கறிஞராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறார். மீனா
கல்யானம் செய்திருப்பது நைஜீரியா நாட்டினை சேர்ந்த
நிகோலஸ் என்பவரை.
கோபாலனின் ஒரே மகன், ஷியாமளாவின் உடன்பிறந்த
சகோதரர் பாலச்சந்திரன் கல்யாணம் செய்திருப்பது ஒரு
மெக்சிகன் நாட்டை சேர்ந்த Latino பெண்மணியை. அவர்களின்
மகள் சாரதா தற்போது அமெரிக்காவில் ஆங்கில பேராசிரியராக இருக்கிறார்.
கமலா ஹாரிஸ் 2014ஆம் ஆண்டு, தன்னுடைய 49ஆவது வயதில்
டக்லஸ் என்கிற ஒரு யூத இனத்தவரை கல்யாணம் செய்துகொண்டார்.
ஷியாமளாவின் முதல் தங்கை , அதாவது கமலாவின் முதல் சித்தி,
டாக்டர் சரளா தற்போது சென்னையில் வாழ்ந்துவருகிறார். அவர்
திருமணம் செய்துகொள்ளவில்லை.
ஷியாமளாவின் இரண்டாவது தங்கை, அதாவது கமலாவின்
இரண்டாவது சித்தி, மகாலட்சுமி தற்போது கனடா நாட்டில் அவர்
கணவருடன் வாழ்ந்துவருகிறார். அவர்கள் குழந்தை பெற்றுக்
கொள்ளவில்லை.
மொத்தத்தில் பைங்காநாடு வெங்கட்ராமன் கோபாலன்
அவர்களுடைய வாரிசுகள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக
வாழ்ந்து, இனம் , மொழி, ஜாதி, மதம் அனைத்தையும் அடித்து
துவம்சம் செய்திருக்கிறார்கள்!!!
அதன் விளைவாக இன்று கமலா ஹாரிஸ் அமெரிக்க நாட்டின்
துணை ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார்!!
.
சமூகப் பண்பாட்டு அடிப்படையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை
தெரிவிப்பது இந்தப் பதிவின் நோக்கம்
பெரியாரைப் பழித்துக் கொண்டிருந்த, ஒரு சமுதாயத்தில்
சிலர், அவரது கொள்கைகளை பின்பற்றி உயர்ந்துள்ளனர்.
இராசபாண்டியன்









