
கரிசலாங்கண்ணி கீரையை சுத்தம் செய்து அதில் சூப் செய்து குடித்து வந்தால் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை அதிகரிக்கிறது.
ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இந்த நோய்கள் அனைத்தும் விரைவில் குணமாகும் .
கரிசலாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதயத்தில் இருந்த அடைப்புகள் நீங்கி ரத்த ஓட்டம் சீராகும்.
மேலும் மண்ணீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் பலத்தை அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு ஏற்படும் மந்த நோய்களை குணமாக்கும்.
தினமும் காலையில் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் தொப்பை குறையும். மேலும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்துவிடும் .









