
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி,' இந்த நாள் எனக்கு மகிழ்ச்சியான நாள். அரசு பள்ளி மாணவர்களுக்கு நன்னாள். அரசுப்பள்ளியில் படித்தவன் என்கிற முறையில் எனக்கு மனநிறைவை ஏற்படுத்திய நாள். கொள்கை அளவில் நீட் தேர்வுக்கான தமிழக அரசின் எதிர்ப்பு தொடரும். நீட் தேர்வு ரத்து செய்ய கோரி பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளேன். சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறோம்.அரசு பள்ளியில் படித்துவரும் மாணவர்களுக்கு மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளோம். நீட் தேர்வை எதிர்கொள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு, வசதி குறைவாக இருந்தது. 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சுமார் 49 சதவீதம் பேர் அரசுப்பள்ளி மாணவர்கள். எனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி இந்த சட்டம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளது. நான் முதல்வரான பொறுப்பேற்றப் பின் தமிழகத்தில் 1,990 மருத்துவ இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன,' என்றார்.








