மத்திய பிரதேசம் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் இருக்கும் ரத்லா என அழைக்கப்படும் ரத்ன புரி நகரம். இங்கு மகா லட்சுமி கோயில் தான் தங்கத்தைப் பிரசாதமாக வழங்கும் சிறப்பு வாய்ந்த ஆலயம் ஆகும். இந்த கோயிலுக்கு வந்து மகாலட்சுமி தேவியை வழிபட்டு செல்லும் பக்தர்கள், தங்களின் கோரிக்கை நிறைவேறினால், நேர்த்திக்கடனாகப் பணம் அல்லது பொருளுக்கு பதிலாக தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாக வழங்குகின்றனர். இப்படி பக்தர்கள் வழங்கும் தங்கம் மற்றும் வெள்ளி மலை போல் கோயிலில் குவிந்து கிடக்கிறது.
ஆண்டு முழுவதும் காண்க்கையாக சேரும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை அனைத்து கோயில்களிலும் கோயில் திருப்பணிக்காக பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த கோயிலில் ஆண்டு தோறும் தீபாவளி தினத்தன்று இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதகமாக வழங்குகின்றனர்.
இந்த கோயிலில் தரப்படும் இந்த பிரசாதத்தை யாரும் விற்பனை செய்வது இல்லை. அது இறைவனால் வழங்கப்பட்டதாக நினைத்து வைத்து பூஜிக்கின்றனர்.
இது யாருக்கெல்லாம் கிடைக்கும் ?
தீபாவளி தினத்தில் இந்த கோயிலுக்கு தரிசிக்க செல்லும் பக்தர்களில் திருமணம் ஆன பெண்களுக்கு இந்த தங்கம், வெள்ளி பிரசாதம் வழங்கப்படுகின்றது. தீபாவளி தினத்தில் இந்த திருக்கோயில் சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கமாக இருக்கின்றது.
ஏழை,எளியோரின் வறுமையை போக்கும் விதமாக இந்த கோயிலில் தங்கம், வெள்ளி பிரசாதமாக வழங்கப்படுகிறது. இருப்பினும் இங்கு வழங்கப்படும் தங்கத்தை விற்பனை செய்யாமல் அதை அதிர்ஷ்டமாக பலரும் வைத்துக்கொள்கின்றனர்.