
தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் தேன் - 2 டேபிள் ஸ்பூன் முட்டை வெள்ளைக்கரு - 2 செய்முறை: ஒரு பாத்திரத்தில் 2 முட்டையின் வெள்ளைக் கருவை தனியாக எடுத்து, அதனுடன் எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன் மற்றும் தேன் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம், கழுத்துப் பகுதியில் தடவி, 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பிரகாசமாக ஜொலிக்கும்.








