தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு புதிதாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், தென்காசி என 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் 37 ஆக உயர்ந்தது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டமாக உருவாக்கப்படும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் மயிலாடுதுறை சிறப்பு அதிகாரியாக, ஐஏஎஸ் அதிகாரி லலிதா, எஸ்.பியாக ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காணொலி காட்சி மூலம்
மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
இதன் மூலம் தமிழ்கத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை
மாவட்டம் உருவாகவுள்ளது. மயிலாடுதுறையை தனி மாவட்டமாக வேண்டும் என்ற தங்கள்
நீண்ட கால கோரிக்கை நிறைவேறியுள்ள நிலையில் மயிலாடுதுறை மக்கள்
மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்த
நிலையில் இன்று அவர்களின் நீண்டநாள் ஆசை நிறைவேற போவது குறிப்பிடத்தக்கது.









