அரசுப் பள்ளிகளில் தொழில்நுட்ப களப்பணிகளை மேற்கொண்டு ஆய்வு நடத்த 640 ஆசிரியர்களை பள்ளிக்கல்வித் துறை தேர்வு செய்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வியின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில்இடைநிலை
கல்வி பயிற்றுவிக்கும் அறிவியல், கணித பட்டதாரிஆசிரியர்களுக்காக ஆசிரியர்
பரிமாற்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி அறிவியல்
மற்றும் கணிதம் சார்ந்த உயர்கல்வி நிறுவனங்கள், ஆய்வுக் கூடங்கள் மற்றும்
அருங்காட்சியகங்களை ஆசிரியர்கள் பார்வையிட்டு களப்பணி மேற்கொள்வர்.
இதன்மூலம் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் உயர்கல்வி சார்ந்த வாய்ப்புகளை
ஆசிரியர்கள் அறிந்து கொண்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஓர் ஆசிரியருக்கு ரூ.3,000
வீதம் மொத்தம் ரூ.19.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான களப்பணிக்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கு தலா 15
முதல் 20 பேர் வீதம் 640 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப்
பட்டியலில் பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் வழங்கிய மற்றும் பணியிடை
பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்படும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை
தரப்பட்டுள்ளது.
மேலும், கரோனா தொற்று காரணமாக 56 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் களப்பணிக்கு
தேர்வு செய்யப்படவில்லை. தேர்வான ஆசிரியர்களின் பெயர்ப் பட்டியல் அந்தந்த
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை
ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.








