மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான ரன்ஜித்சின் திசாலே என்ற ஆசிரியர், பெண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
இவர் ஏழை கிராம்புறங்களை சேர்ந்த பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து பாடுபாட்டு வருகிறார். இந்நிலையில், பெண் குழந்தைகளின் கல்விக்கு பாடுபட்ட இவர், சர்வதேச ஆசிரியர் பரிசுக்கு தேர்வாகி, 7 கோடி ரூபாயை தட்டிச் சென்றுள்ளார்.
140 நாடுகளில் இருந்து 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்ததில் 10 பேர் இறுதி கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். அதில் ரன்ஜித்சின் திசாலே வெற்றி பெற்று விருதுடன் 7 கோடி ரூபாயை வென்றுள்ளார்.
தனக்கு கிடைக்கும் பரிசுத் தொகையில் 50 சதவீதத்தை, இறுதிகட்டமாக தன்னுடன் தேர்வு பெற்ற 9 பேருக்கும் பகிர்ந்து அளிக்க உள்ளதாக ஆசிரியர் ரன்ஜித்சின் திசாலே தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான சர்வதேச சிறந்த ஆசிரியருக்கான விருதினை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ரஞ்சித்சிங் டிசேல் வென்றார். இவர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பரிடிவாடி கிராமத்தில் உள்ள தொடக்கநிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சிறந்த ஆசிரியர் விருது பெற்ற ரஞ்சித்சிங் டிசேலுக்கு 1 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 7 கோடியே 40 லட்சம்) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தனது பரிசுத்தொகையில் 50 சதவிகிதத்தை சிறந்த ஆசிரியர் விருதுக்கு போட்டியிட்ட மேலும் 9 பேருக்கு பிரித்து வழங்குவதாக அவர் அறிவித்தார். இவர் பரிடிவாடி கிராம தொடக்கப்பள்ளியில் சேர்ந்தபின்னர் உள்ளூர் மொழியில் பாட புத்தகத்தை உருவாக்கி மாணவ\மாணவிகளுக்கு தனித்தனியாக க்யூ ஆர் கோர்டு உருவாக்கி பாடங்களை ஆடியோ, வீடியோ மற்றும் கதை வடிவில் தொகுத்து பயிற்றுவித்து வருகிறார். பரிடிவாடி கிராமத்தில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது 100 சதவிகிதம் உறுதியாகியுள்ளது. மேலும், குழந்தை திருமணங்கள் எதுவும் அக்கிராமத்தில் நடைபெறவில்லை