
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சிறுதானியங்கள் உதவுகிறது.
சிறுதானியங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம்
குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாகவும்
காணப்படுகின்றன.
திணையை உட்கொள்ளும்போது உடல் சூடு அதிகரிக்கும்.
திணையில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. திணைமாவுடன் தேனை கலந்து
சாப்பிடும் போது கபம் நீங்கும். விரைவில் செரிமானமாகும்.
சாமையில்
நெல்லரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து உள்ளது. இதனால் மலச்சிக்கல்
மற்றும் நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இரத்த சோகை
உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது.

கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா என பலவகையான பலகாரங்கள் செய்யலாம். கேழ்வரகில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் மூட்டுவலி பிரச்சனைக்கு தீர்வாகிறது.
புரதம் மற்றும் கால்சியம் கம்பில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.








