பள்ளி மாணவ, மாணவியர்க்கு தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் வெற்றிக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் , மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் காணொளி வாயிலாக, தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு " என்ற தலைப்பில் தமிழிலும் , Role of Police in Nation Building என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இதில், சென்னை பெருநகரில் உள்ள 73 பள்ளிகளிலிருந்து 316 மாணவ மாணவியர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதனையடுத்து, சென்னை வேப்பேரி , ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. இதில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டு, தமிழ் மற்றும் ஆங்கிலப்பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கும், மண்டல அளவில் வெற்றி பெற்ற 15 மாணவ , மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் பேச்சு போட்டியில் நடுவர்களாக பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
காவல்துறையின் இந்த முயற்சிக்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும், பாராட்டும் கிடைத்துள்ளது.









