தேவையான பொருட்கள்:
500 மில்லி – நீர்
2 தேக்கரண்டி – ஓமம் விதைகள்
4-5 – துளசி இலைகள்
1 தேக்கரண்டி – மஞ்சள்
ஒரு கைப்பிடி அளவு – புதினா இலைகள்
முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அனைத்து பொருட்களையும் கொதிக்கும் நீரில் சேர்க்கவும். மீண்டும் 10-20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
இதை எவ்வாறு பயன்படுத்துவது?
நாம் சேர்த்த பொருட்கள் அனைத்தும் கொதிக்கும் நீரில் கலந்தவுடன், அதை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதிலிருந்து வரும் நீராவியை 10 நிமிடங்கள் உள்ளிழுக்கவும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு-மூன்று முறையாவது இதனை செய்யுங்கள். உங்கள் மூக்கடைப்பு விரைவில் மறைந்துவிடும் கூடுதலாக, நீராவியை சுவாசித்த பிறகு நீங்கள் அந்த தண்ணீரை வடிகட்டியும் மற்றும் குடிக்கலாம்.









