ஒரே இரவில் உங்களுக்கு பத்து வயசு குறையும் என்று சொன்னால் நம்புவீங்களா …? அட உண்மை தான். அப்படி ஒரு இரகசியம் இந்த பதிவில் உள்ளது. முகத்தில் உள்ள சுருக்கம் நீங்கி, உங்கள் முகம் பளபளப்பாவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். இதற்காக ரொம்ப கஷ்டப்பட வேண்டுமோ என நினைக்க வேண்டாம். தூங்குவதற்கு முன்பு ஒரு பத்து நிமிடங்கள் செலவு செய்தாலே போதும்.
இந்த அழகு பராமரிப்பு செய்ய நாம் பயன்படுத்தப் போகும் முக்கியமான பொருள் ஆரஞ்சு பழ தோல். பழத்தை மட்டும் சாப்பிட்டு நாம் தூக்கி போடும் தோலில் ஏகப்பட்ட வைட்டமின் C உள்ளது. தோலில் உள்ள சுருக்கங்களை போக்கவும், அது ஏற்படாமல் தடுப்பதற்கும் வைட்டமின் C சத்து மிகவும் அவசியம்.
ஆரஞ்சு பழ தோலை ஒரு தட்டில் கொட்டி கொள்ளுங்கள். இந்த தட்டை வெயிலில் வைக்காமல் நிழலிலே வைத்து காய வையுங்கள். இதன் மீது வெயில் மட்டும் படக்கூடாது. மூன்றில் இருந்து நான்கு நாட்கள் காய்ந்த பிறகு அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்து எடுத்து கொள்ளவும். இந்த பொடியை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு காற்று உள்ளே செல்லாதவாறு மூடி வைத்து விட்டால் ஒரு வருடம் ஆனாலும் கெடாது.
இப்போது ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். இந்த பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி ஆரஞ்சு பழத்தோல், ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல், 50 ml ரோஸ் வாட்டர், 3 வைட்டமின் E காப்ஸ்யூல் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். வைட்டமின் E காப்ஸ்யூல் மாத்திரையை உடைத்து அதிலுள்ள எண்ணெயை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்.
நாம் தயார் செய்து வைத்துள்ள கலவை கெட்டியாக இருக்க கூடாது. தண்ணீர் பதத்துடன் தான் இருத்தல் வேண்டும். இதனை ஒரு சீரம் போல தான் நாம் பயன்படுத்த போகிறோம். கலவை கெட்டியாக உள்ளது போல் தெரிந்தால் ரோஸ் வாட்டரை கூடுதலாக சேர்த்து கொள்ளுங்கள். இந்த கலவையை ஃபிரிட்ஜில் எல்லாம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளியில் வைத்தாலே பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
இரவு தூங்க போகும் முன்பு இந்த உங்கள் ஆள்காட்டி விரலால் இந்த சீரமை தொட்டு உங்கள் முகத்தில் ஆங்காங்கே வைக்கவும். பிறகு பத்து நிமிடங்கள் முகத்தை நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். இரவு முழுவதும் இது உங்கள் முகத்திலே இருக்கட்டும். காலை எழுந்தவுடன் எப்போதும் போல முகத்தை கழுவி கொள்ளலாம்.
இதனை நீங்கள் தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தாலே கட்டாயமாக உங்கள் முகத்தில் ஒரு மாற்றத்தை உணர்வீர்கள். நிச்சயம் டகரை பண்ணி பாருங்க.









