பெரும்பாலும் அனைத்து உணவகங்களிலும் அதிகப்படியாக பயண்படும் உணவுப்பொருள் மிளகு குறிப்பாக பொங்கல்,சிக்கன், ரசம் , முட்டை பொறியல்கள் போன்றவைகளில் அதிகமாக பயண்படுத்துகின்றனர்.

அந்த உணவுப் பொருள் தான் மிளகு என்னும் கருப்பு தங்கம். மிளகிற்கு எதற்காகக் கருப்பு தங்கம் என்று பெயர்? தங்கத்தைத் தந்து மிளகை பெரும் அளவுக்கு அதன் தேவை அப்போது இருந்ததா? ஆம் உலக வரலாற்றைத் தீர்மானித்த காரணியாக மிளகு ஒரு காலத்தில் இருந்தது என்பது தான் உண்மை. மிளகின் தடம் சங்க இலக்கிய பாடல்களில் காணக் கிடைக்கிறது.
அன்றைய காலங்களில் முத்து மற்றும் தங்கத்திற்கு இணையாக மிளகு பெயர் பெற்று இருந்திருக்கிறது.முசிறி என்னும் துறைமுகத்திற்கு நிறையக் கப்பல்களில் வந்த கிரேக்கர்கள், பொற்காசுகள் தந்து மிளகை பண்டமாற்று முறையில் வாங்கிச் சென்றனர். மிளகிற்கு இணையான தமிழ் சொல் பிப்பாலி. கிரேக்க வணிகர்களால் அதிக அளவு வாங்கப்பட்டு பிப்பாலி விநியோகம் செய்யப்பட்ட வந்ததால், பிப்பாலி மருவி கிரேக்கத்தில் பிப்பர் ஆனது.
கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்துக்கு வந்து பிப்பர் பிறகு பெப்பர் ஆனது. மிளகாய் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, காரத்திற்காக மிளகு சேர்ப்பது ஒன்று தான் உலக மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மிளகாயின் பயன்பாட்டுக்கு பிறகு, காரத்திற்காக பயன்பட்ட காரணத்தால் பிப்பாலி, மிளகு ஆனது.மிளகாயின் வரலாறு வெறும் 200 ஆண்டுகள் தான். அதற்கு முன்பு மனிதனின் கார தேவைக்கு மிளகு ஒன்று தான் வடிகால்.
மிளகை இடித்து பொடியாக்கி அதை உணவில் சேர்த்து சமைத்து வந்தனர்.இன்று நம்மிடையே குளிர்சாதன பெட்டி இருக்கிறது. அதன் மூலம் உணவை, சமைத்த உணவைப் பதப்படுத்தி வைத்துக் கொள்கிறோம். பண்டைய காலங்களில் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? பண்டைய காலத்து மக்கள் மிளகை உணவு பதப்படுத்தும் ஒரு பண்டமாக உபாயகப்படுத்தி வந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் மிளகில் நிறைய மருத்துவ குணங்கள் உண்டு என்பதையும் அந்த காலத்து மக்கள் உணர்ந்தே இருந்துள்ளனர்.உலகின் மிகப் பழமையான, மூத்த நாகரிகங்களில் ஒன்றான எகிப்து நாகரீகத்தில் இறந்தவர்கள் பதப்படுத்தி பாதுகாக்கும் முறை உண்டு. மம்மி என்று அந்த பதப்படுத்தப்பட்ட இறந்த உடல்கள் அழைக்கப்படுகின்றன.
இவ்வாறாக மம்மி ஆக்கப்பட்ட அரசர்களின் மூக்கு துவாரத்தில் மிளகு வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் எகிப்து மக்கள் மிளகை மருத்துவ குணம் கொண்ட ஒன்றாகவும், விலை உயர்ந்த ஒன்றாகவும் கருதியிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

கிமு 1213 ஆம் நூற்றாண்டில், ராம்சிஸ் என்ற எகிப்தின் இரண்டாம் அரசனின் மரணத்தின் போது, மிளகு பயன்படுத்தப்பட்டுள்ளது.பண்டைய நாகரீகங்களில், பெரும் செல்வம் படைத்த பெண்கள் தங்களின் திருமணத்தின் போது நிறையத் தங்க நகைகளோடு சேர்த்து, மிளகு எடுத்து வருவதை தங்களின் செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கொண்டிருந்தனர்.
தங்கத்தை விடவும், முத்துமணி ரத்தினங்களை விடவும் மிளகு அன்று அதிகம் மதிப்புப் பெற்று இருந்தது. பொங்கல் சாப்பிடும் போது, மிளகை எடுத்து ஓரமாக வைப்பதற்கு முன்பு, அதற்கான வரலாற்றைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.








