
குடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும். சூரிய காந்தி செடியின் விதைகளில் உள்ள வைட்டமின் – ஈ செலீனியம் முதலான ஆன்டிஆக்ஸிடன்ட் சாதாரண காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற பல நோய்களை எதிர்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த விதையில் உள்ள நார்சத்து, உடலிலுள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
இதில் உள்ள லினோலெனிக், ஓலிக் ஆகிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகின்றன. எண்ணெய் சேர்க்காமல் வறுத்த சூரியகாந்தி விதையிலிருந்து சராசரியாக 165 கலோரி, கொழுப்பு 14 கிராம், புரதம் 5 கிராம் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.








