
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. சமீபத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. விருப்பம் உள்ள மாணவர்கள் மற்றும் கல்லூரிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், நிவர், புரெவி புயல் காரணமாக பாதிக்கபட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில இடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். நெற்பயிர்கள், வாழை உள்ளிட்ட நீர்மூழ்கி நாசமாகியுள்ளது. அதை அமைச்சரும், அதிகாரிகளும் பார்வையிட்டனர். மேலும், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை அறிந்து கொண்ட பின்னர்தான் பள்ளிகள் திறக்க முடிவு எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆதிதிராவிட உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








