அறிவியல் ஆயிரம்: மூளைக்குள் நுழையும் கரோனா வைரஸ் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அறிவியல் ஆயிரம்: மூளைக்குள் நுழையும் கரோனா வைரஸ் :

corona virus sent to brain

கரோனா வைரஸில் உள்ள கூர்முனை புரதம் நமது ரத்த மூளையின் தடையைத் தாண்டி உள்ளே நுழைகிறது என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையின் சுகாதார அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது.

மூளைத் தடையைத் தாண்டும்

கரோனா வந்த நோயாளிகளின் மூளையில் மூடுபனி போன்ற நிலை, சோர்வு போன்ற மூளையின் அறிவாற்றல் விளைவுகள் ஏற்படுகிறது என்பதற்கு மேலும் பல சான்றுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆய்வாளர்கள் இது ஏன் என்பதற்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். SARS-CoV-2 வைரஸ் முன்பு வந்த மற்ற வைரஸ்களைப் போலவே மூளைக்கு கெட்ட செய்தியை விதைத்துவிட்டு போயுள்ளது என்ற தகவல் கடந்த டிசம்பர் 16 ஆம் தேதியன்று "இயற்கை நரம்பியல்" (Nature Neuroscience ) என்ற அறிவியல் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஆய்வில், வைரஸின் மேலுள்ள கூர்முனை புரதம்தான் வைரஸின் சிவப்பு கைகள் என்றும், அது சுண்டெலியின் மூளையில் உள்ள இரத்தக் குழாய்களில் இரத்த-மூளை தடையை மீறி உள்ளே நுழைவதாக ஆய்வாளர்கள் சித்தரிக்கின்றனர். கூர்முனை புரதங்கள் மட்டுமே மூளைக்குள் ஒரு பனிமூட்டம் போன்ற நிலையை உண்டுபண்ணுகின்றன. புரத கூர்முனை மூளைக்குள் நுழைவதால், கரோனா நோயை உண்டுபண்ணும் SARS-CoV-2 வைரஸும் இந்த ரத்த மூளைத்தடையைத் தாண்டி மூளைக்குள் நுழைகிறது என உறுதியாக நம்புகின்றனர்.

கூர்முனைப் புரதம் எஸ்1 வில்லன்

கூர்முனைப் புரதம் எஸ்1(S1)புரதம் என்றே அழைக்கப்படுகிறது. இதன் பணி என்ன என்றால் நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்? இந்த எஸ்1 புரதம்தான். இது வைரஸ் எந்த செல்லுக்குள் நுழையவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் சர்வாதிகாரியாக செயல்படுகிறது. இது மற்ற இணைப்புப் புரதங்கள் போலவே பணி செய்கிறது என வாஷிங்க்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்வி நிறுவனத்தின் மருத்துவத் துறை பேராசிரியர் மற்றும் முன்னணி எழுத்தாளரான வில்லியம் ஏ பேங்க்ஸ் (William A Banks) மற்றும் புகட் சௌன்ட் சுகாதார அமைப்பில் (Puget Sound Veterans Affairs Healthcare System) மருத்துவர் மற்றும் ஆய்வாளர் தெரிவிக்கிறார்.

எஸ்1 மாதிரியான ஒட்டும் புரதங்கள் பொதுவாக அவை வைரஸிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும்போது அவைகளே தன்னைத்தானே சிதைத்து வீக்கத்தை உண்டுபண்ணுகின்றன என பாங்க்ஸ் தெரிவிக்கிறார்.

சைட்டோ கைனஸின் ஆதிக்கமும் மூளை மயக்கமும்

இதில் எஸ்1 புரதம் மூளையில் சைட்டோகைனேஸ் (Cytokinase) என்ற நொதியை விடுவிக்க தூண்டுகிறது. மேலும் வீக்கத்தையும் உண்டு பண்ணுகிறது. அதீத வீக்கம் என்பது கரோனா பாதிப்பான சைட்டோகினே புயலால்தான்(Cytokine storm) உருவாகிறது என்று அறிவியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. உடலுக்குள் உள்ள தற்காப்பு அமைப்பு, இந்த வைரஸ் மற்றும் அதன் புரதங்களைப் பார்த்ததும், அது கோபப்பட்டு அதீதமாக செயல்பட்டு, வைரஸைக் கொல்லுவதற்காக அதன்மேல் ஊடுருவுகிறது. இதனால் பாதிப்படைந்த மனிதர்களின் மூளை பனிமூட்டத்தினால், மயக்கமுற்று, மேலும் மற்ற அறிவாற்றல் திசுக்களும் கூட பாதிப்புக்குள்ளாகின்றன.

எஸ்1 புரதமும் ஜிபி120 யும்

பாங்க்ஸ் மற்றும் அவரது குழு இந்த செயல்பாட்டினை ஹெச்ஐவி-1 வைரஸில் சோதனை மேற்கொண்டுள்ளனர். எனவே அதே செயல்தான் கரோனா வைரஸிலும் நிகழ்கிறதா என்று அறிய விரும்பினர்.

கரோனா வைரஸில் உள்ள S1 புரதமும், ஹெச்ஐவி-1ல் உள்ள ஜிபி 120 புரதமும் ஒன்றுதான் என இதனை அறிந்த பாங்க்ஸ் கூறினார். அவை கிளைக்கோபுரதங்கள் (Glycoproteins) எனப்படும் புரதங்கள். இவைகளில் ஏராளமான சர்க்கரை உள்ளது. இவை புரதங்களின் முத்திரை. இவைதான் மற்றவைகளின் ஏற்பியாக செயல்படுபவை. இந்த இரண்டு புரதங்களும், வைரஸ்களின் புஜம் மற்றும் கைகளாகவும் செயல்பட்டு மற்ற ஏற்பிகளை இழுக்கின்றன. இவை இரண்டும் இரத்த-மூளைத் தடையைத் தாண்டும். மேலும் ஜிபி120 போலவே எஸ்1 -ம், மூளையின் திசுக்களுக்கு நஞ்சானவை என பாங்க்ஸ் தெரிவிக்கிறார்.

பாங்க்ஸ் ஆய்வக செயல்பாடு

பாங்க்ஸின் ஆய்வகத்தில் அல்சீமர்ஸ் என்னும் மறதி நோய், நீரிழிவு மற்றும் ஹெச்ஐவியில் ரத்த -மூளை தடைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றை எல்லாம் ஒன்றாகப் போட்டு அந்த ஆய்வகம் இப்போது எஸ்1 புரதத்தில் 2020 ஏப்ரலில் சோதனையைத் துவங்கியுள்ளனர். இவர்கள் ஜாகோப் ராபர் நரம்பியல் துறையின் நடத்தை நரம்பு அறிவியல் மற்றும் கதிர்வீச்சு மருத்துவம் மற்றும் அவரது குழுக்கள், ஒர்ஜியான், உடல்நலம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களை பட்டியலிட்டுள்ளனர்.

சுவாசக்குழாய்->நுரையீரல்-> மூளை

உங்களுக்கு கரோனா பாதிப்பு வந்தால், உங்களுக்கு மூச்சு விடுதலில் சிரமம், மற்றும் அது நுரையீரலில் பாதிப்பு இருப்பதால்தான் அடுத்து வைரஸ் மூச்சுக்குழாய் மற்றும் சுவாச மையங்கள் வழியே மூளைக்குள் நுழையும். பின்னர் அது அங்கே தனது சித்து விளையாட்டைக் காட்டும்.

எஸ்1 போக்குவரத்து என்பது, ஆண்களின் நுகர்வுப் பையில் மற்றும் சிறுநீரகம் போன்றவற்றில் பெண்களைவிட ஆண்களுக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது என்று ஆய்வாளர் ராபர் கூறினார்.

கவனம் கவனம் கரோனா!

கரோனாவை மிக எளிதாக எடுத்துச் செல்லும் மக்களுக்காக பாங்க்ஸ் ஒரு பொதுச் செய்தி அனுப்பியுள்ளார். 'நீங்கள் இந்த வைரஸுடன் மோத வேண்டாம். கரோனா வைரஸால் ஏற்படும் விளைவுகள் பெரும்பாலும் மூளைக்குள் சென்று அங்கேயே நீண்ட காலம் வாழ்ந்து மையப்படுத்தி பிரச்சினையை உண்டுபண்ணுகின்றன' என்கிறார்.

எனவே கரோனாவுடன் மோதலால் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள விழிப்புணர்வுடன் போதிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடியுங்கள்.

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்

மேனாள் மாநிலத் தலைவர்]

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H