ஐஏஎஸ், ஐபிஎஸ் (IAS, IPS) தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு அரசின் இலவசப் பயிற்சி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஐஏஎஸ், ஐபிஎஸ் (IAS, IPS) தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு அரசின் இலவசப் பயிற்சி: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

பயிற்சியில் சேர விருப்பம் உடையவர்கள் பயிற்சி மையத்தின் அதிகாரபூர்வமான இணையதளமான http://www.civilservicecoaching.com சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் நாளை (11/12/2020) காலை 10 மணி முதல் தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் டிச.28 மாலை 6 மணியுடன் முடிகிறது.

நுழைவுத்தேர்வு:

பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டுத் தகுதியுடையவர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு 24/01/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடக்கிறது. நுழைவுத்தேர்வு ஒரு மதிப்பெண் வினா அடிப்படையில் இருக்கும் (Objective type). தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அரசு தேர்வாணையப் பயிற்சி மையத்தில் 6 மாத காலம் இலவசத் தங்குமிடம், உணவுடன் பயிற்சி அளிக்கப்படும்!        பயிற்சியில் சேர தேவையான கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரிகளிலிருந்து இளநிலைப் பட்டம் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது அடுத்த ஆண்டு ஆக.1-ம் தேதி அன்று, அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்கவேண்டும்.

வயது வரம்பு: இதர வகுப்பினர் 32 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர்கள் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பகுதிநேரப் பயிற்சியும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் முழு நேரமும், வார நாட்களில் மாலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை சிறப்பு வகுப்புகளும் நடைபெறும்.

பயிற்சிக் கட்டணம்

பயிற்சிக் காலம் முழுவதும் முற்பட்ட வகுப்பினருக்கு ஆயிரம் ரூபாய் மற்ற பிரிவினருக்கு எந்தக் கட்டணமும் இல்லை. விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு விடுதிக் கட்டணமும் உணவும் இலவசமாக வழங்கப்படும். பகுதிநேரப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் அளிக்கப்படாது. ஆனால், பயிற்சி நேரத்தில் உணவுகள் இலவசமாக வழங்கப்படும். அனைத்துப் பயிற்சியாளர்கள் காப்புத் தொகையாக ரூ.3000/- செலுத்த வேண்டும்.

பயிற்சிக்கான மொத்த இடங்கள்:

விடுதியில் தங்கிப் பயிற்சி பெற 225 பேருக்கு அட்மிஷன் போடப்படும். அவர்களுக்குப் பயிற்சிக் காலத்தில் தங்குமிடம், உணவு இலவசம். இதில் வகுப்புவாரியாகத் தாழ்த்தப்பட்டோர் 110 இடங்கள் (ஆதிதிராவிடர் 92, அருந்ததியர் 18), பழங்குடியினர் 3 , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 40, பிற்படுத்தப்பட்டோர் 54, பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர் 7, முற்பட்ட வகுப்பினர் 4 என மொத்தம் 225 பேர்.

பகுதி நேர வகுப்பில் சேருவோருக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் 100. இதில் தாழ்த்தப்பட்டோர் 49 (ஆதிதிராவிடர் 41, அருந்ததியர் 8), பழங்குடியினர் 1, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 18, பிற்படுத்தப்பட்டோர் 24, பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர் 3 , மாற்றுத்திறனாளிகள் 3, முற்பட்ட வகுப்பினர் 2.

சிவில் தேர்வு எழுத ஆர்வம் உள்ள வசதி குறைந்த மாணவர்கள், வெளிமாவட்ட மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.

அளிக்கவேண்டிய சான்றிதழ்கள்:

தேர்வானவர்கள் 5 சான்றிதழ்களைக் கட்டாயம் அளித்தால் மட்டுமே பயிற்சியில் சேர அனுமதி.

ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஒரு ஸ்டாம்ப் சைஸ் போட்டோ மற்றும் திருப்பி அளிக்கக்கூடிய டெபாசிட் தொகை ரூ.3000 கட்ட வேண்டும்.

குறிப்பு: இந்தப் பயிற்சி மையத்தில் இதற்கு முன் முழு நேரப்பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி இல்லை.

இவ்வாறு அரசு தேர்வாணையப் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H