மீன் சாப்பிட ருசியாக இருந்தாலும் அதனை அதிக கவனத்தோடு தான் சாப்பிட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் கூட மீன் முள் தொண்டையில் சிக்கி கொள்ளும். இது மிகவும் ஆபத்தான ஒரு விஷயம். பொதுவாக மீன் முள் தொண்டையில் சிக்கி கொண்டால் வெள்ளை சாதத்தை உருட்டி வாயில் வைத்து விழுங்க சொல்வார்கள். இன்னும் சிலர் வாழைப்பழத்தை சாப்பிட அறிவுறுத்துவார்கள். இது குறித்த இன்னும் சில டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மீன் சாப்பிடும் போது அதிக கவனத்துடன் சாப்பிட வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கூடுதல் கவனம் தேவை. அவசர அவசரமாகவோ அல்லது பேசிக்கொண்டே மீன் சாப்பிட கூடாது. இது அனைத்தையும் மீறி தொண்டையில் முள் சிக்கி விட்டால் சூடான சாதத்தை உருண்டையாக உருட்டி வாயில் வைத்து விழுங்குங்கள்.
தொண்டையில் முள் மாட்டி கொண்டால் எக்காரணம் கொண்டும் கையை மட்டும் விட்டு எடுக்க முயற்சி செய்யாதீர்கள். இவ்வாறு செய்யும் போது முள்ளானது தொண்டையை குத்தி கிழித்து விடும். இதனால் இரத்த கசிவு ஏற்படும். பிறகு நீங்கள் மருத்துவரை சென்று பார்க்கும் நிலை ஏற்படும். அடுத்த ஒரு மாதத்திற்கு தொண்டையில் ஏதோ இருப்பது போலவே இருக்கும். கஞ்சி ஆகாரம் சாப்பிட வேண்டி இருக்கும்.
எனவே மீனை எப்போதும் வெளிச்சத்தில் வைத்து சாப்பிடுங்கள். அதே போல் மீனை சாப்பிட்டு தட்டில் வைத்து சாப்பிடாமல் அதனை தனியாக ஒரு தட்டில் வைத்து சாப்பிடுங்கள். இதனால் முள் சாதத்தோடு மிக்ஸ் ஆகாமல் இருக்கும். குழம்பு நன்றாக கொதித்த பிறகு கடைசி ஐந்து நிமிடத்தில் மீனை போட்டு எடுத்தால் போதும். மீன் அதிக நேரம் கொதித்து விட்டால் மீன் குழம்போடு கலந்து விடும்.

குழந்தைகளுக்கு மீனை கட்லெட்டாக செய்து கொடுத்தால் விரும்பியும் சாப்பிடுவார்கள், அதே சமயம் முள் பிரச்சனையும் இருக்காது. கர்ப்பிணி பெண்களுக்கு காரப்பொடி என்று சொல்லப்படும் பொடி மீனில் சூப் செய்து கொடுத்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். எல்லா வயதினருக்கும் ஏற்றதாக இருக்கும் மீனை ஒரு சிலர் முள் காரணமாகவே தவிர்த்து விடுவார்கள். இனியாவது அவ்வாறு செய்யாமல் கவனமாக சாப்பிட்டாலே போதும்.









