
பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகிற முதல் பிரச்சினை சரும வறட்சி தான். அந்த சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிற்நத தீர்வாக மஞ்சள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது.
பொதுவாக மஞ்சள் கிழங்கை பச்சையாகவோ அல்லது வேகவைத்து அரைத்தோ முகத்துக்குப் பூசினால் அழகு கூடும் என்பது நமக்குத் தெரியும். நம்முடைய முன்னோர்கள் நம்மைப் போல ஆயிரக்கணக்கான க்ரீம்களையெல்லாம் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு இருந்த ஒரு பியூட்டி க்ரீம் மஞ்சள் தான்.








