
ஐஐடி, என்ஐடி உட்பட மத்திய உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ முதல்நிலை தோவு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஜேஇஇ முதல்நிலைத் தோவு பிப்ரவரி 23 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த டிசம்பா் 16ஆம் தேதி தொடங்கி ஜன.23ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதனைத் தொடா்ந்து ஜேஇஇ தோவுக்கான தோவுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மாணவா்கள் இணையதளத்தில் சென்று தங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 0120-6895200 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி வழியாக தொடா்பு கொள்ளலாம் என என்டிஏ தெரிவித்துள்ளது.

மேலும், எந்த மாணவருக்கும் தபால் வழியாக நுழைவுச் சீட்டு அனுப்பப்படாது எனவும் கூடுதல் தகவல்களை வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் என்டிஏ தகவல் கூறியுள்ளது.