
மாநகர பஸ்
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்துக் கழக (எம்.டி.சி.) மேலாண்மை இயக்குனருக்கு
தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா தொற்று காரணமாக அனைத்து வகை (மூத்த
குடிமக்கள் பாஸ் உள்ளிட்டவை) இலவச பஸ் பாஸ்களை சம்பந்தப்பட்ட
அலுவலகங்களில் வழங்குவது
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது என்று அரசுக்கு சென்னை மாநகர
போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார். மேலும்,
குளிரூட்டப்பட்ட
மாநகர பஸ்களைத் தவிர மற்ற அனைத்து மாநகர பஸ்களிலும் மூத்த குடிமக்கள்
பலரும் பயணிக்கும் வகையில் இலவச பாஸ் அல்லது டோக்கன் வழங்குவதற்கு அரசு
வருகிற 1-ந்தேதியில் இருந்து அனுமதிக்க வேண்டும் என்றும் அதில்
குறிப்பிட்டிருந்தார். ிஆர்எம் என்றால் என்ன? அதன் பயன்பாடு என்ன? சேல்ஸ்ஃபோர்ஸ் சி.ஆர்.எம் ஐ பயன்படுத்தியதால் நிறுவனங்களின் விற்பனை 38% அதிகரித்துள்ளது. மேலும் தெரிந்து கொள்ளுங்கள்!"
அவர் கேட்டுக்கொண்டபடி, வருகிற 1-ந்தேதியில்
இருந்து மூத்த குடிமக்களுக்கான இலவச பாஸ் அல்லது டோக்கனை, சென்னை மாநகர
பஸ்களில் பயணிப்பதற்காக
வழங்க அரசு அனுமதிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.