Panel List
CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டப்படுகிறது.
கொரோனா
வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச்
மாதம் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து,
அனைத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது. பின்னர்,
ஜூன் மாதம் முதல் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தி வருகிறது.
இதனால்,
அந்தந்த மாநிலங்களில் உள்ள கொரோனா பாதிப்பை கொண்டு முதலில் பள்ளிகள்
திறக்கப்பட்டது. சில மாநிலங்களில் அனைத்து வகுப்புகளும்
திறக்கப்பட்டது.இதனிடையே வருகின்ற மார்ச் மாதம் முதல் 10 மற்றும் 12-ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.இந்நிலையில் இன்று CBSE
10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிட்டப்படும்
என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.